சபாஷ்! கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர்-க்கும் சேர்த்து ஸ்மார்ட் டிவிக்கு அட்டகாச ஆபர் போட்ட Flipkart.!

|

பிளிப்கார்ட் தளத்தில் flipkart year end sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் டிசம்பர் 28-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

 சிறப்பு விற்பனை

சிறப்பு விற்பனை

குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் தாம்சன், மோட்டோரோலா, சாம்சங், டிசிஎல், நோக்கியா உள்ளிட்ட பல ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவிகளுடன் சேர்த்து பிரபலமான Vu ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 43-இன்ச் Vu Premium ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

 43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி

43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி

முன்பு ரூ.35,000-க்கு விற்பனை செய்யப்பட்ட 43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி தற்போது ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

Samsung போன்களுக்கு கிடைக்க தொடங்கிய 5 புதிய அம்சங்கள்! உங்க Phone-க்கும் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?Samsung போன்களுக்கு கிடைக்க தொடங்கிய 5 புதிய அம்சங்கள்! உங்க Phone-க்கும் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

1920 x 1080 பிக்சல்ஸ்

43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், ஃபுல் எச்டி ஆதரவு மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி மற்றும் 20 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

பெசல்-லெஸ் டிசைன்

குவாட்-கோர்ட் பிராசஸர் மற்றும் Linux இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி. பின்பு இந்த டிவி பெசல்-லெஸ் டிசைன்-ஐ கொண்டுள்ளது. அதேபோல் நெட்ஃபிக்ஸ், யூடியூப் போன்ற செயலிகளை இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்தமுடியும்.

Airtel பயனர்கள் கவனத்திற்கு: எக்கச்சக்க டேட்டாவுடன் கூடுதல் சலுகையை வழங்கும் அற்புதமான ப்ரீபெய்ட் திட்டம்.!Airtel பயனர்கள் கவனத்திற்கு: எக்கச்சக்க டேட்டாவுடன் கூடுதல் சலுகையை வழங்கும் அற்புதமான ப்ரீபெய்ட் திட்டம்.!

 கனெக்டிவிட்டி

குறிப்பாக எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் தாம்சன் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கும் நம்ப முடியாத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Thomson OATHPRO Max அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி

Thomson OATHPRO Max அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி

அதாவது 55-இன்ச் Thomson OATHPRO Max அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த 55-இன்ச் தாம்சன் ஸ்மார்ட் டிவி தற்போது ரூ.29,999-க்கு வாங்கக் கிடைக்கிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?

500 நிட்ஸ் ப்ரைட்னஸ்

55-இன்ச் தாம்சன் OATHPRO Max அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி ஆனது 3840 x 2160 பிக்சல்ஸ், அல்ட்ரா எச்டி 4கே ஆதரவு, 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தைக் கொண்டு இந்த 55-இன்ச் தாம்சன் OATHPRO Max அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவி கூகுள் அசிஸ்டண்ட், க்ரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதுதவிர நெட்ஃபிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல செயலிகளை இந்த 55-இனச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்

இதுதவிர 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 2ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், A53 x 4-1.5 GHz பிராசஸர், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த 55-இன்ச் தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்.

Best Mobiles in India

English summary
Flipkart year end sale: 43-inch, 55-inch smart TVs offered at 45 percent discount: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X