பிளிப்கார்ட் பிச்சிக்குது.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் OnePlus டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் இயர் எண்ட் சேல்(Year End Sale) என்கிற சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. அதாவது இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறும். இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 40-இன்ச் ஒன்பிளஸ் ஒய்1 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.20,489 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

எனவே இந்த ஒன்பிளஸ் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் இப்போது 40-இன்ச் ஒன்பிளஸ் ஒய்1 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் (OnePlus Y1 Full HD LED Smart Android TV) அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
40-இன்ச் ஒன்பிளஸ் ஒய்1 ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (OnePlus Y1 Full HD LED Smart Android TV Specifications): அதாவது 40-இன்ச் ஒன்பிளஸ் ஒய்1 ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் ஃபுல் எச்டி ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 240 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸமார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
இந்த ஒன்பிளஸ் ஒய்1 ஸ்மார்ட் டிவி மாடலில் 64-பிட் பவர்ஃபுல் Cortex-A53 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
அதேபோல் 40-இன்ச் ஒன்பிளஸ் ஒய்1 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவும் உள்ளது. பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபிஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த டிவியில் காமா எஞ்சின் கிராஃபிக் பிராசஸர் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் 40-இன்ச் ஒன்பிளஸ் ஒய்1 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளை விட மேம்பட்ட அம்சங்கள் வழங்குகிறது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல செயலிகளை இந்த 40-இன்ச் ஒன்பிளஸ் ஒய்1 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் ஈதர்நெட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.
குறிப்பாக இந்த டிவி ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது பிரைம் வீடியோ, யூடியூப், நெட்ஃபிக்ஸ் ஆகிய ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ரிமோட்டில் உள்ளது. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த 40-இன்ச் ஒன்பிளஸ் ஒய்1 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








