வீட்டுக்கு 2 டிவி ஆர்டர்.. ரூ.30000-க்கு 55 இன்ச் டிவி.. கியூஎல்இடி டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
55 இன்ச் டிவி பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் போடும்படி 40 சதவீதத்துக்கும் அதிகமான டிஸ்கவுண்ட்டில் பிளிப்கார்ட் டிவி விற்பனையில் (Flipkart TV Sale) மாடல்கள் கிடைக்கின்றன. இந்த விற்பனையில் கியூஎல்இடி டிஸ்பிளே, டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ், டால்பி விஷன் போன்ற பீச்சர்கள், பெசல்-லெஸ் மற்றும் மெட்டாலிக் டிசைன் உள்ளிட்டவற்றை பேக் செய்துள்ள மூன்று டிவி மாடல்களை பார்க்கலாம். இந்த பட்டியலில் இன்பினிக்ஸ் (Infinix), சியோமி (Xiaomi) மற்றும் கோடக் (KODAK) மாடல்கள் இருக்கின்றன.
55 இன்ச் இன்பினிக்ஸ் ஜீரோ டிவி அம்சங்கள், விலை (55 inch Infinix Zero TV Specifications Price): இதுவொரு ஜீரோ சீரிஸ் (Zero Series) மாடலாகும். இந்த இன்பினிக்ஸ் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே வருகிறது. 36W ஆடியோ அவுட்புட் கொடுக்கும் 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது.

ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) மற்றும் மீடியாடெக் குவாட் கோட் (MediaTek Quad-core) சிப்செட் வருகிறது. டால்பி ஆடியோ சிஸ்டம் (Dolby Audio System), பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) கிடைக்கிறது. ஸ்கிரீன் மிரரிங், ப்ளூடூத், வை-பை மற்றும் எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, கேமிங் கன்சோல் கனெக்டிவிட்டிகள் கிடைக்கிறது.
விவிட் கலர்கள் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. பெசல்-லெஸ் டிசைன் (Bezel Less Design) மற்றும் எக்ஸ்-பிளேட் மெட்டல் ஸ்டான்ட் (X-Blade Metal Stand) உள்ளது. இந்த 55 இன்ச் இன்பினிக்ஸ் ஜீரோ டிவியானது, பிளிப்கார்ட் விற்பனையில் 45 சதவீத டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.32,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
55 இன்ச் சியோமி எக்ஸ் சீரிஸ் டிவி அம்சங்கள், விலை (55 inch Xiaomi X Series TV Specifications Price): இந்த சியோமி டிவி எக்ஸ் சீரிஸ் (X Series) மாடலாகும். 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே, 4K ரெசொலூஷன், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR 10), எச்எல்ஜி (HLG) மற்றும் விவிட் பிக்சல் என்ஜின் (Vivid Picture Engine) வருகிறது.

30W ஆடியோ அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் உள்ளன. டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் எக்ஸ் (DTS X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) கிடைக்கிறது. 2 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி உள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. இந்த டிவியின் விலை 41 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.31,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
55 இன்ச் கோடக் டிவி அம்சங்கள், விலை (55 inch KODAK TV Specifications Price): இந்த கோடக் டிவியில் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே, 4K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் மற்றும் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 40W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது.

ப்யூர் கலர் அவுட்புட் கொடுக்க ஏஎம்ஓ டெக்னாலஜி கிடைக்கிறது. ஆடியோவில் டால்பி அட்மோஸ், டிடிஎஸ் ட்ரூ சரவுண்ட் சப்போர்ட் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஸ் வருவதால், கூகுள் அசிஸ்டன்ட், பிளோ ஸ்டோர், குரோம்காஸ்ட் உள்ளிட்டவை வருகிறது. இந்த 55 இன்ச் கோடக் டிவியானது, 49 சதவீத டிஸ்கவுண்ட்டில் ரூ.30,300 பட்ஜெட்டில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications