பொளக்குது விற்பனை! ரூ.10000 பட்ஜெட்ல 32 இன்ச்.. ரூ.19000 பட்ஜெட்ல 43 இன்ச்.. டால்பி ஆடியோ.. Flipkart டிவி சேல்
பிளிப்கார்ட் சூப்பர் வேல்யூ டேஸ் விற்பனையில் (Flipkart Super Value Days Sale) அடிமட்ட விலைக்கு 43 இன்ச் மற்றும் 32 இன்ச் டிவிகள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. வெறும் ரூ.10000 பட்ஜெட்டிலேயே டால்பி ஆடியோ, எச்டிஆர் டிஸ்பிளே, கூகுள் டிவி ஓஎஸ் கொண்ட டிவி கிடைக்கிறது. அதேபோல ரூ.19000 பட்ஜெட்டில் ஃபுல்எச்டி டிஸ்பிளே, டால்பி ஆடியோ, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் 16 ஜிபி மெமரி கொண்ட டிவியும் கிடைக்கிறது. ஏசர் டிவி மாடல்கள் இந்த பட்டியலில் இருக்கின்றன.
32 இன்ச் ஏசர் ஜே சீரிஸ் டிவி அம்சங்கள் (32 inch Acer J Series TV Specifications): இந்த ஏசர் டிவியில் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிரெடி (HD Ready) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஃபிரேம்லெஸ் டிசைனில் (Frameless Disign) பிரீமியம் லுக் கொடுக்கிறது.

கலர் டெப்த் மற்றும் கான்ட்ராஸ்ட் டெப்த் கொடுக்க எச்டிஆர்10 (HDR 10) வருகிறது. மேலும், இன்டலிஜென்ட் ஃபிரேம் ஸ்டெபிலைசேஷன் என்ஜின் (Intelligent Frame Stabilization Engine) மற்றும் விவிட் கான்ட்ராஸ்ட் அவுட்புட் கொடுக்க சூப்பர் பிரைட்னஸ் (Super Brightness) சப்போர்ட் கிடைக்கிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) உள்ளது.
24W ஆடியோ அவுட்புட் கொடுக்கும் 2 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டிலும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. பில்ட்-இன் கூகுள் காஸ்ட் (Built-in Google Cast), கூகுள் மீட் (Google Meet) போன்ற கூகுள் ஆப்கள் வருகின்றன. இந்த 32 இன்ச் ஏசர் டிவியில் 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வருகிறது.
3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) மற்றும் 2 யுஎஸ்பி போர்ட் (USB Port) உள்ளது. அதேபோல பில்ட்-இன் வை-பை (inbuilt-Wi-Fi) மற்றும் ப்ளூடூத் கிடைக்கிறது. இந்த டிவிக்கு 1 வருட வாரண்டி பெறலாம். பிளிப்கார்ட் சூப்பர் வேல்யூ டேஸ் விற்பனையில் 50 சதவீத டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.10,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் டிவி அம்சங்கள் (43 inch Acer I PRO TV Series Specifications): இந்த ஏசர் டிவியில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொண்ட 43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவிலும் எச்டிஆர்10, இன்டலிஜென்ட் ஃபிரேம் ஸ்டெபிலைசேஷன் என்ஜின் போன்ற பீச்சர்கள் வருகின்றன.
அதேபோல 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கூடுதலாக 16.7 மில்லியன் கலர் டெப்த் பேக் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆடியோ அவுட்புட்டில் டால்பி ஆடியோ மட்டுமல்லாமல், 30W சவுண்ட் அவுட்புட் கொடுக்கும் 2 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. கூகுள் டிவி ஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) கிடைக்கிறது.
இந்த ஏசர் டிவியில் 1.5 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி வருகிறது. மற்ற போர்ட் மற்றும் வயர்லெஸ் கனெக்டிவிட்டி பீச்சர்கள் முந்தைய மாடலில் பார்த்ததை போலவே இருக்கின்றன. பிளிப்கார்ட் சூப்பர் வேல்யூ டேஸ் விற்பனையில் 54 சதவீத டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.19,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த ஏசர் டிவிக்கும் 1 வருட வாரண்டி உள்ளது.


Click it and Unblock the Notifications