Home
Gadgets

43-இன்ச் பிரீமியம் டிவியின் விலையை கடுமையாக குறைத்த Vu.. எவ்வளவு தெரிஞ்சா இப்பவே ஒரு ஆர்டர் போட்ருவீங்க!

இந்தியாவில் Vu நிறுவனம் அருமையான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் பிரபலமான 43-இன்ச் Vu ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (43GA-Android)ஸ்மார்ட் டிவிக்கு தான் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.35,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த டிவிக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

43-இன்ச் பிரீமியம் டிவியின் விலையை கடுமையாக குறைத்த Vu.!

எனவே இந்த 43 inch Vu Premium டிவியை ரூ.19,999-விலையில் வாங்க முடியும் மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஐபிஎஸ் பேனல் மற்றும் 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.

Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது டூயல் கோர் குவாட்-கோர் பிராசஸர் வசதி கொண்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டு இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட் டிவிக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் எகஸ் ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

43-இன்ச் பிரீமியம் டிவியின் விலையை கடுமையாக குறைத்த Vu.!

இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது பெசல்-லெஸ் டிசைன் மற்றும் ஐபிஎஸ் பேனல் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் மூலம் காட்சிகளை மிகவும் துல்லியமாகப் பார்க்க முடியும். அதற்குத் தகுந்த வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி. அதேபோல் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், யூடியூப் மியூசிக் போன்ற ஹாட்கீகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart slashes price of 43-inch Vu Premium TV: Do you know how much? Check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X