Home
Gadgets

இனி வாங்குனா 55-இன்ச் டிவி தான்.. Redmi 4கே டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி அறிவிப்பு! எந்த மாடல்?

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) விற்பனையில் ரெட்மி நிறுவனத்தின் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுவும் இந்த டிவி டால்பி ஆடியோ விவிட் பிக்சர் என்ஜின், கார்டெக்ஸ் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகையைப் பார்க்கலாம்.

இந்தியாவில் ரெட்மி 55-இன்ச் ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல் ரூ.35,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த டிவிக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.30,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே இந்த டிவியை ரூ.28249 விலையில் வாங்கிவிட முடியும்.

Redmi 4கே டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி அறிவிப்பு.. எந்த மாடல்?

ரெட்மி 55-இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள் (Redmi Smart Fire TV 4K Specifications): ரெட்மி 55-இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது 4கே டிஸ்பிளே (4K display) உடன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த ரெட்மி 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவியில் உள்ளன.

ரெட்மி 55-இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது க்டோ-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-core Cortex A55 processor) உடன் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிக்சர் இன் பிக்சர் (பிஐபி) மோட் வசதியும் இந்த டிவியில் உள்ளது.

குறிப்பாக ஃபயர் ஓஎஸ் 7 (Fire TV OS 7) மூலம் இந்த ரெட்மி 4கே டிவி இயங்கும். அதேபோல் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் ரிமோட் இந்த டிவியுடன் கிடைக்கும்.

அதுவும் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் மியூசிக்கிற்கான ஷார்ட்கட் பட்டன்கள் கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 55 இன்ச் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

Redmi 4கே டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி அறிவிப்பு.. எந்த மாடல்?

அதேபோல் வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. இந்த டிவியின் ஆடியோ வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் (DTS: Virtual X) போன்ற ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த ரெட்மி டிவி. மேலும் இந்த 55-இன்ச் டிவி 30W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
flipkart sale: Redmi 55 inch 4K Smart Fire TV gets 45 percent discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X