Home
Gadgets

தீபாவளி ஆஃபர்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. கம்மி விலையில் Hisense ஆண்ட்ராய்டு டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஹைசென்ஸ் ஸ்மார்ட் டிவி தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த 32-இன்ச் ஹைசென்ஸ்4ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவிக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது 32-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஏ சீரிஸ் எடி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது தற்போது 13,489 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரு.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். இப்போது இந்த டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கம்மி விலையில் கிடைக்கும் Hisense ஆண்ட்ராய்டு டிவி.. எந்த மாடல்?

32-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் எடி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது 1366 x 768 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஐபிஎஸ் ஏ-பிளஸ் பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டிவி. எனவே இந்த ஹைசென்ஸ் ஏ4ஜி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் சிஏ55 பிராசஸர் உடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான 32-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் எடி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி. இதுதவிர ஜி31 எம்பி2 கிராபிக்ஸ் பிராசஸர் ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டிவி. குறிப்பாக கேமிங் வசதிகளுக்கு இந்த டிவி அருமையாகப் பயன்படும் என்றே கூறலாம்.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த 32-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் எடி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

குறிப்பாக அல்ட்ரா விவிட் ஹை கான்ட்ராஸ்ட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டிவி. மேலும் உங்களுக்குப் பிடித்தமான திரைப்படங்களைப் பார்க்கும் போது தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஹைசென்ஸ் ஸ்மார்ட் டிவி. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், இன்-பிட் குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் இந்த டிவியியுடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.

அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் உடன் வெளிவந்துள்ளது இந்த டிவி. இதுதவிர சில ஆப்ஸ்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட். அதேபோல் தரமான ஆடியோ வசதியுடன் இந்த 32-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் எடி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி வெளிவந்துள்ளது.

கம்மி விலையில் கிடைக்கும் Hisense ஆண்ட்ராய்டு டிவி.. எந்த மாடல்?

அதன்படி டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ், டிடிஎஸ் ஸ்டுடியோ சவுண்ட், டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த 32-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் எடி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி. இதுதவிர இந்த ஹைசென்ஸ் ஸ்மார்ட் டிவியில் பல்வேறு ஆடியோ அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

டூயல் பேண்ட் வைஃபை, ஈதர்நெட் லேன், எச்டிஎம் போர்ட், யுஎஸ்பி போர்ட், டிஜிட்டல் ஆடியோ அவுட், ப்ளூடூத் 5.0, ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த 32-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் எடி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி. கம்மி விலையில் தனித்துவமான அம்சங்களுடன் இந்த டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
flipkart sale 2023: 32-inch Hisense A4G Smart TV available at 46 percent off : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X