குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவிகளை வாங்க சரியான நேரம்: பிளிப்கார்ட் தளத்தில் அதிரடி ஆபர்.!
வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் டிவி டேஸ் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் தாம்சன் நிறுவனம் அதன் பல ஸ்மார்ட் டிவி மாடல்களை குறைந்த விலையில் விற்பனை செய்யவுள்ளது. கண்டிப்பாக இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு விற்பனை ஆனது பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த விற்பனையின் போது ரூ.7,999 என்ற ஆரம்ப விலையில் தாம்சன் ஸ்மார்ட் டிவிகளை வாங்க முடியும்.

Oath Pro & Path சீரிஸ்
பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த டிவி டேஸ் விற்பனையில் தாம்சன் நிறுவனத்தின் Oath Pro & Path சீரிஸ் 32-இன்ச், 40-இன்ச், 42-இன்ச், 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் மாடல்களை குறைந்த விலையில் வாங்க முடியும். இப்போது எந்தெந்த மாடல்கள் எவ்வளவு விலையில் கிடைக்கும் என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகள்
- தாம்சன் 24TM2490 மாடல் ஆனது ரூ.7,999-க்கு வாங்க கிடைக்கும்.
- தாம்சன் 32TM3290 மாடல் ஆனது ரூ.11,999-க்கு வாங்க கிடைக்கும்.
- தாம்சன் 32PATH0011 மாடல் ஆனது ரூ.13,999-க்கு வாங்க கிடைக்கும்.
- தாம்சன் 32PATH0011BL மாடல் ஆனது ரூ.14,999-க்கு வாங்க கிடைக்கும்.
- தாம்சன் 40PATH7777 மாடல் ஆனது ரூ.18,999-க்கு வாங்க கிடைக்கும்.
- தாம்சன் 42PATH2121 மாடல் ஆனது ரூ.19,999-க்கு வாங்க கிடைக்கும்.
- தாம்சன் 4345PATH மாடல் ஆனது ரூ.25,999-க்கு வாங்க கிடைக்கும்.
- தாம்சன் 43 OATHPRO 2000 மாடல் ஆனது ரூ.28,999-க்கு வாங்க கிடைக்கும்.
- தாம்சன் 50PATH1010 மாடல் ஆனது ரூ.29,999-க்கு வாங்க கிடைக்கும்.
- தாம்சன் 50 OATHPRO 1212 மாடல் ஆனது ரூ.33,999-க்கு வாங்க கிடைக்கும்.
- தாம்சன் 55PATH5050 மாடல் ஆனது ரூ.35,999-க்கு வாங்க கிடைக்கும்.
- தாம்சன் 55 OATHPRO 0101 மாடல் ஆனது ரூ.38,999-க்கு வாங்க கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
குறிப்பாக தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்கள் சிறந்த மென்பொருள் மற்றும் அசத்தலான புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டவை. அதிலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் சூப்பர் பிரைட் டிஸ்பிளே வசதி, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், குவாட் கோர சிபியு, மாலி குவாட் கோர் கிராபிக்ஸ் பிராசஸர், 178 டிகிரி பரந்த கோணம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த அதநவீன தாம்சன் ஸ்மார்ட் டிவிகள் ப்ளூடூத் மற்றும் எச்.டி.எம்.ஐ-எனேபிள்டு, யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன. பின்பு தாம்சன் ஸ்மார்ட் டிவிகள் 40 வாட் ஸ்பீக்கர்கள் வரை வழங்குகிறது, எனவே சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும்.

Chromecast ஆதரவு மற்றும் AirPlay ஆதரவு
மேலும் Chromecast ஆதரவு மற்றும் AirPlay ஆதரவு கொண்டு இந்த தாம்சன் டிவிகள் வெளிவந்துள்ளதால் டிவி ஸ்க்ரீனில்
ஸ்மார்ட்போனை இயக்க உதவும். பின்பு சோனி லிவ்,அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications