வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. கம்மி பட்ஜெட்ல 43 இன்ச் 4K டிவி.. டால்பி ஆடியோ.. எச்டிஆர்10.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Flipkart Great Republic Day Sale 2026)எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் ஒனிடா 43 இன்ச் 4கே டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ஒனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (ONIDA Nex G 43 inch 4K Smart Google TV) மாடலுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.17999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஒனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (ONIDA Nex G 43 inch 4K Smart Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் இந்த ஒனிடா நெக்ஸ் ஜி டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), 300 நிட்ஸ் பிரைட்னஸ், எச்எல்ஜி, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
நெக்ஸ்ஜி (NexG) சிப்செட் ஒனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) கொண்டுள்ளது இந்த டிவி. பின்பு இந்த டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியும் உள்ளது.
ஏஐ பிக்சர் ஆப்டிமைசேஷன் (AI Picture Optimisation), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology)உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ஒனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவியில் உள்ளன.
அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த ஒனிடா டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த ஒனிடா டிவியில் உள்ளன.

டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் ஒனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன.
அதுவும் ஒனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவி மாடலில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஒனிடா டிவியில் உள்ளன.
photo credits: onida


Click it and Unblock the Notifications








