அள்ளிக்கோங்க.! ரூ.11499/- மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ரூ.6499/-க்கு மற்றும் பல.!
சரி, ப்ளிப்கார்ட் குடியரசு தின விற்பனை நடைபெறுவது எப்போது.? அந்த விற்பனையில் என்னென்னகருவிகளுக்கு என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்.?
இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட் அதன் குடியரசு தின விற்பனையை அறிவித்துள்ளது. போட்டியாளரான அமேசான் நிறுவனம் அதன் கிரேட் இந்தியன் செல் விற்பனை தேதிகளை வெளிப்படுத்திய பின்னர் இந்த ப்ளிப்கார்ட் அறிவிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, இரண்டு இ- காமர்ஸ் விற்பனையும் ஒன்றோடு ஒன்று மோதவுள்ளது, இந்த போட்டியின் சூட்டில் குளிர்காயப்போவது என்னவோ வாடிக்கையாளர்கள் தான். சரி, ப்ளிப்கார்ட் குடியரசு தின விற்பனை நடைபெறுவது எப்போது.? அந்த விற்பனையில் என்னென்னகருவிகளுக்கு என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்.?

ஜனவரி 21- ஜனவரி 23
ப்ளிப்கார்ட்டின் விற்பனையானது வருகிற ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 23 அன்று நிறைவு பெற, அமேசான் விற்பனையும் அதே ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 24 அன்று முடிவடையும். இந்த விற்பனையில் வழக்கம்போல ஸ்மார்ட்போன்கள், டிவி. , மடிக்கணினிகள் மற்றும் இதர மின்னணுவியல் பொருட்களுக்கு பலவகையான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.10,000 தள்ளுபடி
அறிவிக்கப்பட்டுள்ள குடியரசு தின விற்பனையின் ஒரு பகுதியாக பல ஆண்ட்ராய்டு தொலைபேசிகளின் மீது தள்ளுபடிகள் தொகுக்கப்பட்டுள்ளது. அதன்படி கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.48,999/-க்கு (எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனையில் ரூ.10,000 தள்ளுபடி உட்பட) வாங்க கிடைக்கும்.

மி மிக்ஸ் 2
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்7 ஆனது ரூ.26,990/-க்கு வாங்க கிடைக்கும் மறுகையில், சியோமி நிறுவனத்தின் மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000/- எக்ஸ்சேன்ஜ் சலுகை வாய்ப்பு கிடைக்கிறது. ஆக இதன் விற்பனை விலை ரூ.29,999/- ஆகும்.

சாம்சங் கேலக்சி ஆன் நெக்ஸ்ட்
இந்தியாவில் பிரபலமடைந்து வரும் ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஹானர் நிறுவனத்தின் லைட் 9 கருவியானது இந்த விற்பனையின் ஒருபகுதியாக தளத்தில் அறிமுகமாகிறது. தவிர, சாம்சங் கேலக்சி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் 64ஜிபி மற்றும் 16ஜிபி மாறுபாடுகள் முறையே ரூ10,999/-க்கும் (உண்மையான விலை ரூ.17,900/- ஆகும்) மற்றும் ரூ.9,999/-க்கும் (உண்மையான விலை ரூ.10,99 வாங்க கிடைக்கும்.

லெனோவா கே8 பிளஸ்
உடன் சியோமி ரெட்மீ நோட் 4, லெனோவா கே8 பிளஸ், மோட்டோ ஜி5 பிளஸ் மற்றும் ஸ்மார்ட்ரான் டி.போன் பி ஆகிய ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.10,999, ரூ.8,999, ரூ.10,999/- மற்றும் ரூ.7,999/-க்கு இந்த ப்ளிப்கார்ட் குடியரசு தின சிறப்பு விற்பனையில் வாங்க கிடைக்கும்.

பேனசோனிக் எலுகா ஏ3
மேலும் இன்பினிக்ஸ் நோட் 4 ஆனது ரூ.7,999/-க்கு வாங்க கிடைக்கும், இதன் உண்மையான விலை ரூ.8,999/- ஆகும் மற்றும் பேனசோனிக் நிறுவனத்தின் எலுகா ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.6,499/-க்கு வாங்க கிடைக்கும் இதன் உண்மையான விலை ரூ.11,499/- ஆகும். ஐவூமி ஐ1 மற்றும் ஐவூமி ஐ1எஸ் கருவிகளுக்கும் இந்த விற்பனையில் தள்ளுபடி உண்டு.

10 சதவிகிதம் கேஷ்பேக்
மேலும் பல ஸ்மார்ட்போன்கள் இந்த பட்டியலில் இணையும் என்பதை பிரதிபலிக்கும் வண்ணம் ப்ளிப்கார்ட் நிறுவனம் விளம்பர வாசகம் ஒன்றையும் பதிவிட்டுள்ளது. உடன் மடிக்கணினிகள், டிவிகள் மற்றும் இதர மின்னணுவியல் ஆகிய பொருட்களுக்கும் சலுகைகள் கிடைக்கும் சிட்டி வங்கி கடன் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும் குறைந்தபட்ச கொள்முதல் தொகை மற்றும் அதிகபட்ச கேஷ்பேக் போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை


Click it and Unblock the Notifications








