கம்மி விலையில் ஸ்மார்ட் டிவிகளை வாங்க சரியான நேரம்: ஆபர் போட்டு அதிரடி காட்டிய Flipkart.! முழு விவரம்.!
இந்தியாவில் தற்போது அதிநவீன ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் Grand Home Appliances Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது மே 22-ம் தேதி முதல் மே 25-ம் தேதி வரை இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பார்ப்போம்.

சியோமி எம்ஐ 4ஏ 40-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி: இந்த 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.13,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சியோமி ஸ்மார்ட் டிவி பயனர்களுக்கு ரூ.1500 வரை உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.
20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஃபுல் எச்டி டிஸ்பிளே, கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, 64-பிட் குவாட்-கோர்ட் பிராசஸர்,1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ்,எச்எம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த சியோமி எம்ஐ 4ஏ 40-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
32-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் எக்ஸ்3 32-இன்ச் டிவிக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த டிவியை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும். பெசல்-லெஸ் டிசைன், டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், குவாட்-கோர் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் Y1 32-இன்ச் ஸ்மார்ட் டிவி: பிளிப்கார்ட் தளத்தில் ஒன்பிளஸ் Y1 32-இன்ச் டிவிக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு டிவியை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். 20வாட்ஸ் ஸ்பீக்கர்கள், பெசல்-லெஸ் டிசைன், குவாட்-கோர் பிராசஸர், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு என பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
32-இன்ச் சாம்சங் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி: 32-இன்ச் சாம்சங் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.13,490-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். Linux இயங்குதளம், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
நோக்கியா 40-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி: ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்ட இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவிக்கு 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ரூ.17,999-விலையில் வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், டூயல் பேண்ட் வைஃபை, டால்பி ஆடியோ ஆதரவு
உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்டு இந்த டிவி.

40-இன்ச் கோடக் எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: பிளிப்கார்ட் தளத்தில் இந்த கோடக் ஸ்மார்ட் டிவிக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.15,999-விலையில் வாங்க முடியும். 24வாட்ஸ் ஸ்பீக்கர்கள், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் எனப் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 40-இன்ச் கோடக் எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி. இதுதவிர பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








