40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட Flipkart.! ஆளுக்கொரு டிவி பார்சல்.!
பிளிப்கார்ட் தளத்தில் Flipkart TV Days sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை நவம்பர் 18-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிறப்பு விற்பனை
அதுவும் பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் 50-இன்ச், 43-இன்ச, 40-இன்ச், 32-இன்ச் ஸ்மர்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி பிளிப்கார்ட் தளத்தில் டிவிகளை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது
பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளைப் பார்ப்போம்.

மோட்டோரோலா Revou 2
பிளிப்கார்ட் தளத்தில் 40-இன்ச் மோட்டோரோலா Revou 2 ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.30,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குவாட்-கோர் பிராசஸர்,ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ்,ஃபுல் எச்டி ஆதரவு, 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார்யூட்யூப் போன்ற பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

கோடாக் 7எக்ஸ் ப்ரோ
40-இன்ச் கொண்ட கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஃபுல் எச்டி எல்இடி ஸ்மர்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலுக்கு தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.15,999-க்கு வாங்க முடியும்.
24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், குரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட், ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல சிறப்பான வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

43-இன்ச் Thomson 9R PRO ஸ்மார்ட் டிவி
பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் Thomson 9R PRO ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.33,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.19,999-விலையில் வாங்க முடியும்.
40வாட்ஸ் ஸ்பீக்கர்கள், அல்ட்ரா எச்டி 4கே ஆதரவு, ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 2ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

32-இன்ச் Hisense E4G Series ஸ்மார்ட் டிவி
பிளிப்கார்ட் தளத்தில் 32-இன்ச் Hisense E4G Series ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலுக்கு 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.11,999-விலையில் வாங்க முடியும்.
குறிப்பாக 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்,பெசல்-லெஸ் டிசைன், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம்,1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த 32-இன்ச் Hisense E4G Series ஸ்மார்ட் டிவி. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் யூட்யூப் போன்ற பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

32-இன்ச் iFFALCON எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
பிளிப்கார்ட் தளத்தில் 32-இன்ச் iFFALCON எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலுக்கு 59 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.10,999-க்கு வாங்க முடியும். மேலும் 16 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 64-பிட் ஏ55 பிராசஸர், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், குரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

50-இன்ச் கோடாக் CA PRO ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
பிளிப்கார்ட் தளத்தில் 50-இன்ச் கோடாக் CA PRO ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலுக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.46,499-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.26,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், அல்ட்ரா எச்டி 4கே ஆதரவு, ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், 2ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த 50-இன்ச் 50-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவி.


Click it and Unblock the Notifications