நாளை கடைசி: ஒன்பிளஸ், சியோமி ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத தள்ளுபடியை வழங்கிய Flipkart.!
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது Flipkart Big Saving Days 2022 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 32-இன்ச் முதல் 65-இன்ச் வரை பல ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை டிசம்பர் 21 (நாளை) முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் தேர்வுசெய்யப்பட்ட கார்டுகளை கொடுத்து ஸ்மார்ட் டிவிகளை வாங்கினால் உடனடி கேஷ்பேக் சலுகையும் கூட கிடைக்கிறது. சரி இப்போது முன்னணி நிறுவனங்களின் டிவிகளுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடியைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் Y1ஸ்மார்ட் டிவி
பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் Y1 எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.8,999-விலையில் வாங்க முடியும். மேலும் Linux இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் பிரைம் வீடியோ, யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் குவாட-கோர் பிராசஸர், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
40-இன்ச் ஒன்பிளஸ் Y1 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
முன்பு ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒன்பிளஸ் Y1 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல், தற்போது பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.19,999-க்கு கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ ஆதரவு, பெசல்-லெஸ் டிசைன், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.

40-இன்ச் எம்ஐ 4A Horizon Edition ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
பிளிப்கார்ட் தளத்தில் எம்ஐ 4A Horizon Edition ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.19,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1250 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். குவாட்-கோர் பிராசஸர், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
32-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
பிளிப்கார்ட் தளத்தில் 32-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.8,999-விலையில் வாங்க முடியும். 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ARM Cortex A53 பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், வைஃபை ஆதரவு, ஆண்ட்ராய்டு இயங்குதளம், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி. அதேபோல் பிரைம் வீடியோ, யூடியூப் போன்ற பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

40-இன்ச் ரியல்மி ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
முன்பு ரூ.31,999-க்கு விற்பனை செய்யப்பட்ட 40-இன்ச் ரியல்மி ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல் தற்போது பிளிப்கார்ட் அறிவித்துள்ள தள்ளுபடி மூலம் ரூ.17,999-க்கு கிடைக்கிறது. பின்பு தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதேபோல் 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், குவாட்-கோர்ட்ARM Cortex-A55 பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
43-இன்ச் கோடாக் CA Series ஸ்மார்ட் டிவி
பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் கோடாக் CA Series ஸ்மார்ட் டிவிக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.37,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த கோடாக் ஸ்மார்ட் டிவி தற்போது 20,999-க்கு வாங்க கிடைக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி ஆதரவு, 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், சிஏ53 குவாட்-கோர் பிராசஸர், 1.75ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
43-இன்ச் தாம்சன் ஆண்ட்ராய்டு டிவி
பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த 43-இன்ச் Thomson 9A Series டிவி முன்பு ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த டிவிக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இப்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.15,999-க்கு வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications