Home
Gadgets

தீபாவளி ஆஃபர்.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. 20W ஸ்பீக்கர்கள்.. மலிவு விலையில் மோட்டோரோலா டிவி.. எந்த மாடல்?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் தளத்தில் பல முன்னணி நிறுவனங்களின் சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த 32-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 32-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் எச்டி ரெடி எல்இடிஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA Envision X HD Ready LED Smart Google TV) மாடலுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.10,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1750 வரை தள்ளுபடி கிடைக்கும்.

தீபாவளி ஆஃபர்.. மலிவு விலையில் மோட்டோரோலா டிவி.. எந்த மாடல்?

இப்போது மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த மோட்டோரோலா டிவி 1366 x 768 பிக்சல்ஸ், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் சக்திவாய்ந்த மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 7 பிக்சர் மோட் ஆதரவு இந்த டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா 32-இன்ச் மாடல். மேலும் இந்த அட்டகாசமான டிவிக்கு இன்பில்ட் ஜிபியு ( கிராபிக்ஸ் கார்டு) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் வசதிகளுக்கு மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மிகவும் அருமையாகப் பயன்படும்.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

20 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 12.7 மில்லியன் கலர்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டிவி.

தீபாவளி ஆஃபர்.. மலிவு விலையில் மோட்டோரோலா டிவி.. எந்த மாடல்?

கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி. மேலும் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் அடுத்த ஆண்டு துவத்தில் பல்வேறு அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart offers 45 percent discount on MOTOROLA Envision X Smart TV: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X