Home
Gadgets

ரூ.15,999 போதும்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆண்ட்ராய்டு 11.. ஆஃபரில் 40-இன்ச் டிவி.. பிளிப்கார்ட் பிச்சிக்குது..

பிளிப்கார்ட் தளத்தில் super shaadi sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை வரும் நவம்பர் 30-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்க முடியும்.

அதன்படி இப்போது மிகவும் அதிகம் எதிர்பார்த்த தாம்சன் எஃப்ஏ சீரிஸ் (Thomson FA Series) 40 இன்ச் டிவி 2023 மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவி முன்பு ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த டிவியை ரூ.15,999 விலையில் வாங்க முடியும்.

30W ஸ்பீக்கர்கள்.. ஆண்ட்ராய்டு 11.. ஆஃபரில் 40-இன்ச் டிவி..

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். இப்போது தாம்சன் எஃப்ஏ சீரிஸ் (Thomson FA Series) 40 இன்ச் டிவி 2023 மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தாம்சன் எஃப்ஏ சீரிஸ் 40 இன்ச் டிவி 2023 மாடல் ஆனது ஃபுல் எச்டி பிளஸ் எல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080 x 1920 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் Realtek பிராசஸர் வசதி இந்த டிவியில் உள்ளது. இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டு இந்த தாம்சன் எஃப்ஏ சீரிஸ் 40 இன்ச் டிவி 2023 மாடல் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாகக் கூறினால் இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிசைன் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த ஸ்மார்ட் டிவியில் இருக்கின்றன. அதேபோல் கேமிங் வசதிக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாமசான தாம்சன் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.

30 வாட்ஸ் கொண்ட பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் தாம்சன் எஃப்ஏ சீரிஸ் 40 இன்ச் டிவி 2023 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் எஃப்ஏ சீரிஸ் 40 இன்ச் டிவி 2023 மாடல்.

30W ஸ்பீக்கர்கள்.. ஆண்ட்ராய்டு 11.. ஆஃபரில் 40-இன்ச் டிவி..

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் டால்பி டிஜிட்டல் பிளஸ் அம்சமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிவியில் நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) மற்றும் யூடியூப் (Youtube) போன்ற ஓடிடி ஆப்கள் உள்பட மொத்தமாக 6,000 ஆப்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் இதில் உள்ளதாக தெரிகிறது. பின்பு வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. பின்பு நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் போன்ற தளங்களுக்கு ஷார்ட்கட் பட்டன் கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart offers 40 percent off on Thomson FA Series 40 inch TV 2023 model : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X