Home
Gadgets

பிரபல நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட் டிவிக்கு நம்ப முடியாத தள்ளுபடி.! உடனே முந்துங்கள்.!

பிளிப்கார்ட் தளத்தில் Grand Home Appliances Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது மே 22-ம் தேதி முதல் மே 25-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த Vu நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவிக்கு தான் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிரபல நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட் டிவிக்கு நம்படி முடியாத தள்ளுபடி

அதாவது Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது முன்பு ரூ.35,000-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஸ்மார்ட் டிவியை இப்போது ரூ.21,489-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல் 1920 x 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிசைன் வசதியுடன் வெளிவந்துள்ளது. இது ஒரு சிறந்த டிவி அனுபவத்தைக் கொடுக்கும். பின்பு இந்த ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் மிகவும் எளிமையாக கையாளும் வகையில் காணப்படும் லீனக்ஸ் ஓஎஸ் (இயங்குதளம்) கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி எளிமையாக பயன்படுத்த முடியும். மேலும் நெட்ஃபிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட் டிவிக்கு நம்படி முடியாத தள்ளுபடி

20 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர் ஆதரவுடன் இந்த அட்டகாசமான Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியில் பின்பு டிடிஎஸ் எச்டி ஆதரவு உள்ளது. எனவே இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபத்தை வழங்கும். மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி.

வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல். எனவே சிறந்த ஆடியோ மற்றும் வீடியோ அனுபவத்தை வழங்கும் இந்த 43-இன்ச் Vu பிரீமியம் டிவியை நம்பி வாங்கலாம். இதுதவிர பிளிப்கார்ட் தளத்தில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart offers 38 percent off on 43-inch Vu Premium Smart TV: Full Details: Check price, specs, offers : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X