40-இன்ச் OnePlus ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் வாங்க சரியான நேரம்.! அசத்தல் சலுகை.!
சியோமி, சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டியாக அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது ஒன்பிளஸ் நிறுனம். குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒரு அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ஒன்பிளஸ் டிவி 40 ஒய்1எஸ் (OnePlus TV 40 Y1S) மாடலுக்கு தான் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட் டிவி ரூ.21,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.20,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஒன்பிளஸ் டிவி 40 ஒய்1எஸ் (OnePlus TV 40 Y1S) மாடலை வாங்கினால் ரூ.1250 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் இப்போது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் கொண்டு இயங்கும் ஒரு 40 இன்ச் ஸ்மார்ட் டிவியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த ஒன்பிளஸ் டிவியை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம். ஏனென்றால் இது ஃபுல் எச்டி ரெசல்யூஷனை கொண்ட 40 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் இது சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குவதற்காக எச்டிஆர் 10, எச்டிஆர் 10+ மற்றும் எச்எல்ஜி ஃபார்மட் சப்போர்ட்டையும் (HLG Format Support) கொண்டுள்ளது. கடைசியாக இந்த டிவி 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டமுடன் வருகிறது, இது டால்பி ஆடியோவையும் (Dolby Audio) ஆதரிக்கிறது.
இதன் டிஸ்பிளேவில் மெல்லிய பெஸல்களே (Thin Bezels) உள்ளன. ஆனால் கீழ் பக்கத்தில் தடிமனான பெஸல்களை காணமுடிகிறது. இதிலுள்ள காமா எஞ்சின் (Gama Engine) காட்சியின் தரத்தை மேம்படுத்தும் மற்றும் அதி-தெளிவான கன்டென்ட்டையும் உறுதி செய்யும்.
மேலும் இந்த டிவி மீடியாடெக் MT9216 குவாட் கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது மாலி G32 MP2 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜை பொறுத்தவரை, 8ஜிபி இன்டர்னல் மற்றும் இது 1ஜிபி ரேம் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு டிவி 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் ஆக்ஸிஜன் பிளே 2.0-க்கான ஆதரவையும் கொண்டுள்ளது
கனெக்டிவிட்டி (Conectivity) ஆப்ஷன்களை பொறுத்தவரை, டூயல்-பேண்ட் வைஃபை, டேட்டா சேவர், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் (Built-in Chromecast), மிராகாஸ்ட் (Miracast), இரண்டு எச்டிஎம்ஐ 2.0 போர்ட், இரண்டு யூஎஸ்பி டைப்-சி போர்ட், RJ45 கனெக்டர் போர்ட் மற்றும் ப்ளூடூத் v5.0 போன்றவைகளை கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் பயன்படுத்த முடியும். மேலும் சிறந்த திரை அனுபவம் மற்றும் ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. எனவே இந்த 40-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








