Home
Gadgets

ஆளுக்கு 2 வாங்குவீங்க.. ரூ.12,999 போதும்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் பிரபல நிறுவனத்தின் 40-இன்ச் டிவி..

தாம்சன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான அம்சங்களுடன் கம்மி விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கிறது தாம்சன் (Thomson) நிறுவனம். இந்நிலையில் தாம்சன் நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பண்டிகை காலம் என்பதால் பிளிப்கார்ட் தளத்தில் தொடர்ந்து சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தாம்சன் ஆல்பா 40-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2023 எடிஷன் (Thomson Alpha Full HD LED Smart Linux TV 2023 Edition)-க்கு தான் 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு இந்த டிவி ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் தாம்சன் ஆல்பா 40-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.12,999 விலையில் வாங்க முடியும்.

30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் பிரபல நிறுவனத்தின் 40-இன்ச் டிவி..

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த தாம்சன் ஆல்பா 40-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2023 எடிஷன்-ஐ வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் இப்போது இந்த தாம்சன் 40-இன்ச் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தாம்சன் ஆல்பா 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே.

குறிப்பாக சக்திவாய்ந்த குவாட்-கோர் பிராசஸர் வசதியுடன் தாம்சன் ஆல்பா 40-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் மாலி ஜி31 (Mali G31) கிராபிக்ஸ் கார்டு உடன் வெளிவந்துள்ளது தாம்சன் ஆல்பா 40-இன்ச் ஸ்மார்ட் டிவி. கேமிங் வசதிகளுக்கு இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

பாட்டம் ஃபயரிங் 30 வாட்ஸ் ஸ்பீக்கர் உடன் இந்த அசத்தலான தாம்சன் ஆல்பா 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம்.

30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் பிரபல நிறுவனத்தின் 40-இன்ச் டிவி..

இந்த தாம்சன் ஆல்பா 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் பெசல்-லெஸ் ( bezel-less) டிசைன் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவியின் லினக்ஸ் ஓஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி உடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவும் உள்ளது.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான தாம்சன் ஆல்பா 40-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக சியோமி, ஒன்பிளஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது சற்று உயர்வான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்ட தாம்சன் ஆல்பா 40-இன்ச் ஸ்மார்ட் டிவி சற்று குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் நம்பி வாங்கலாம். மேலும் தாம்சன் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart offers 27 percent discount on Thomson Alpha 40-inch Smart TV: check price, specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X