ஃபிளிப்கார்ட் மார்க் டர்போஸ்ட்ரீம் ஸ்டிக் அறிமுகம்! அமேசான், ஏர்டெல்லுக்கு போட்டியா?

|

அமேசான் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் ஸ்ட்ரீமிங் ஸ்டிக்களுக்கு போட்டியாக ஃபிளிப்கார்ட் நிறுவனமும் புதிய ஸ்மார்ட் ஸ்ட்ரீமிங் ஸ்டிக் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாதனத்திற்கு ஃபிளிப்கார்ட் நிறுவனம் மார்க் டர்போ-ஸ்ட்ரீம் என்று பெயரிட்டுள்ளது.

புதிய மார்க் டர்போ-ஸ்ட்ரீம்

ஃபிளிப்கார்ட் நிறுவனம் மார்க் என்ற பெயரின் கீழ் ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், ஏசி, மைக்ரோவேவ் ஓவென் போன்று பல மாடல் சாதனங்களை அறிமுகம் செய்திருந்தது. தற்பொழுது இந்த வரிசையில் புதிய மார்க் டர்போ ஸ்ட்ரீம் என்ற ஸ்ட்ரீமிங் ஸ்டிக்கை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0

ஆண்ட்ராய்டு 9.0

ஃபிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ள இந்த மார்க் டர்போஸ்ட்ரீம் சாதனம் ஆண்ட்ராய்டு 9.0 வெர்ஷனில் இயங்குகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அனைத்து ஆப்ஸ்களும் இதில் எடுக்கும். அதேபோல் உங்கள் சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றிவிடும்.

வோடபோன் அறிமுகம் செய்த மலிவு விலை திட்டங்கள்: கடுப்பில் ஜியோ.!வோடபோன் அறிமுகம் செய்த மலிவு விலை திட்டங்கள்: கடுப்பில் ஜியோ.!

மார்க் டர்போஸ்ட்ரீம் ஸ்டிக் சிறப்பம்சம்

மார்க் டர்போஸ்ட்ரீம் ஸ்டிக் சிறப்பம்சம்

மார்க் டர்போஸ்ட்ரீம் ஸ்டிக் வினாடிக்கு 60 பிரேம்களில் 1920X1080 என்கிற ஹை-டெபனிஷன் எச்.டி வீடியோ சேவையை வழங்குகிறது. இந்த மார்க் டர்போஸ்ட்ரீம் ஸ்டிக் 1 ஜிபி டிடிஆர் கொண்ட 3ஜிபி ரேம்; 8 ஜிபி ரோம் போன்ற ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டால்பி டிஜிட்டல் ஆடியோ

டால்பி டிஜிட்டல் ஆடியோ

ஸ்ட்ரீம் ஸ்டிக் சாதனம் என்பதனால் இதில் பில்ட்-இன் கிறோம்காஸ்ட் சேவையும் உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனை காஸ்ட் செய்துகொள்ளலாம். டால்பி டிஜிட்டல் ஆடியோ, கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு கொண்ட வாய்ஸ் கண்ட்ரோல் சேவை மற்றும் அதற்கான ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

செவ்வாயில் தனிமையில் உலவும் க்யூரியாசிட்டி! அதுவே அனுப்பிய புகைப்படம்.செவ்வாயில் தனிமையில் உலவும் க்யூரியாசிட்டி! அதுவே அனுப்பிய புகைப்படம்.

அமேசான் மற்றும் ஏர்டெல்லுக்கு போட்டியாக

அமேசான் மற்றும் ஏர்டெல்லுக்கு போட்டியாக

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த மார்க் டர்போஸ்ட்ரீம் ஸ்டிக் ஃப்ளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.3,499 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதேபோல் இந்த மார்க் டர்போஸ்ட்ரீம் ஸ்டிக், அமேசானின் ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்டிக் சாதனங்களை விட விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Flipkart Introduces Marq TurboStream device Cheaper Than Amazon Fire Stick And Airtel Xstream Stick : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X