Home
Gadgets

Flipkart GOAT Sale 2024: முழுசா ரூ.10,500 டிஸ்கவுண்ட்.. OnePlus போன்களை தொடர்ந்து Tablet மீதும் பலே ஆபர்!

அமேசான் இந்தியா வலைத்தளத்தின் ப்ரைம் டே விற்பனைக்கு (Amazon Prime Day Sale) போட்டியாக பிளிப்கார்ட் வலைத்தளமானது கோட் சேல் (Flipkart GOAT Sale) என்கிற சிறப்பு விற்பனையை நடத்துகிறது. ப்ரைம் டே சேலில் ஒன்பிளஸ் 12 (OnePlus 12), ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) உட்பட பல லேட்டஸ்ட் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிளிப்கார்ட் ஆனது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) மீது நம்ப முடியாத அளவிலான விலை குறைப்பு மற்றும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் கோட் சேலில் ஒன்பிளஸ் பேட் மீது அப்படி என்ன ஆபர் கிடைக்கிறது? வழக்கமாக ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் டேப்லெட்டின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது ரூ.28,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

OnePlus போன்களை தொடர்ந்து Tablet மீதும் பலே ஆபர்!

கூடுதலாக, ஆக்சிஸ் வங்கி (Axis Bank), ஐடிஎஃப்சி வங்கி (IDFC Bank) மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் (HDFC bank) கார்டு பயனர்களுக்கு ரூ.1,500 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். இதன் மூலம் ஒன்பிளஸ் பேட் டேப்லெட்டின் இறுதி ஆபர் விலையை ரூ.27,499 ஆக குறைக்க முடியும்.

ஒன்பிளஸ் பேட் டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? இது 2,800 x 2,000 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டால்பி விஷன் ஆதரவு உடனான 11.61 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது 67W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 9,510mAh பேட்டரியுடன் வருகிறது. மேலும் இந்த டேப்லெட்டில் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஓம்னி-பேரிங் சவுண்ட் பீல்ட் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவும் உள்ளது.

அமேசான் ப்ரைம் டே சேலில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது?தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் அசல் விலையான ரூ.64,999 க்கு பதிலாக ரூ.5000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.6,259 கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம். இதன் மூலம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.54,000 க்குள் கொண்டு வரமுடியும். இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால் ஒன்பிளஸ் 12-ஐ ரூ.53,470 க்கு வாங்க முடியும்.

ப்ரைம் மெம்பர்ஷிப் இல்லாத பயனர்கள் எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.4,300 தள்ளுபடி மட்டுமே கிடைக்கும். அதாவது ப்ரைம் மெம்பர்களுக்கு கிடைப்பதை விட ரூ.1959 குறைவாக கிடைக்கும். அமேசான் பிரைம் மெம்பர்ஷிபிபின் 1 மாத கால சந்தா ரூ.299 க்கு வாங்க கிடைக்காது. இந்த சந்தாவை வாங்குவதன் மூலம் ஒன்பிளஸ் 12 மீது கிடைக்கும் சலுகையை முழுமையாக பெறலாம்.

ஒன்பிளஸ் 12ஆர் மீதான சலுகை: அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது ஒன்பிளஸ் 12ஆர்-ன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) இயர்பட்ஸ் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். கூடுதலாக ஐசிஐசிஐ மற்றும் ஒன் கார்டு பயனர்களுக்கு ரூ.3,000 வரையிலான தள்ளுபடியும் கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 மற்றும் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி மீதான சலுகை: நோர்ட் சிஇ 4 மாடல் ஆனது ரூ.3000 தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.2000 தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் ஓப்பன் மற்றும் நோர்ட் சிஇ 3 மீதான சலுகை: ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஆனது ரூ.1,39,999 க்கு பதிலாக ரூ.20,000 தள்ளுபடியை பெற்று ரூ.1,19,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) ஸ்மார்ட்போன் ரூ.26,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart GOAT Sale 2024 Massive Discount on OnePlus Pad How to Buy This Tablet For Rs 27499
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X