Home
Gadgets

Flipkart GOAT Sale 2024: இப்போ விட்டா இனி கிடைக்காது.. இந்த Apple AirPods மாடல் மீது மெகா விலை குறைப்பு!

வழக்கமான இயர்பட்ஸ்களில் இருந்து ஆப்பிள் ஏர்பாட்ஸ்களுக்கு அப்கிரேட் ஆக விரும்புவோர்களை குறிவைத்து பிளிப்கார்ட் வலைத்தளமானது அதன் கோட் சேலில் (Flipkart GOAT Sale), ஆப்பிள் ஏர்பாட்ஸ் செக்கென்ட் ஜெனரேஷன் (Apple AirPods 2nd Generation) மாடலை இதுவரை இல்லாத அளவிலான மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது. இந்த ஏர்பாட்ஸ் மாடல் மீது அப்படி என்ன டிஸ்கவுண்ட் கிடைக்கிறது? இதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? பிளிப்கார்ட் கோட் சேலில் வேறு என்னென்ன தயாரிப்புகள் மீது மிகப்பெரிய தள்ளுபடிகள் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் சிறந்த செயல்திறனை வழங்கும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் சீரிஸின் கீழ் நான்கு வெர்ஷன்கள் உள்ளன: ஏர்பாட்ஸ் செக்கென்ட் ஜெனரேஷன், ஏர்பாட்ஸ் தேர்ட் ஜெனரேஷன் (AirPods 3rd generation), ஏர்பாட்ஸ் ப்ரோ செக்கென்ட ஜெனரேஷன் (AirPods Pro 2nd generation), ஏர்பாட்ஸ் மேக்ஸ் (AirPods Max). இவைகளில் பட்ஜெட்-விலை வாசிகளுக்கு ஏற்ற மலிவான மாடல் என்றால் அது ஏர்பாட்ஸ் செக்கென்ட் ஜெனரேஷன் தான்!

இந்த Apple AirPods மாடல் மீது மெகா விலை குறைப்பு!

தற்போது இதன் விலை இன்னும் குறைக்கப்பட்டுள்ளது. ஜூலை 25 ஆம் தேதி வரை நடக்கவுள்ள பிளிப்கார்ட் கோட் சேலின் ஒரு பகுதியாக ஆப்பிள் ஏர்பாட்ஸ் செக்கென்ட் ஜெனரேஷன் வெறும் ரூ.8,498 க்கு வாங்க கிடைக்கிறது. பொதுவாக இது ரூ.12,900 க்கு வாங்க கிடைக்கும். ஆனால் தற்போது ரூ.4,826 என்கிற நேரடி தள்ளுபடியின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது இது எந்த விதமான வங்கி தள்ளுபடியையும் உள்ளடக்காத நேரடி ஆபர் விலை ஆகும். ஒருவேளை நீங்கள் கூடுதலாக பேங்க் தள்ளுபடியையும் பெற விரும்பினால், அதற்கும் வாய்ப்பு உள்ளது. பேங்க் ஆபரின் கீழ் ஆப்பிள் ஏர்பாட்ஸ் செக்கென்ட் ஜெனரேஷன் மீது கூடுதலாக 10% தள்ளுபடி கிடைக்கும். அதாவது ரூ.849 தள்ளுபடி கிடைக்கும். இதையும் சேர்த்தால் ஆப்பிள் ஏர்பாட்ஸ் செக்கென்ட் ஜெனரேஷனின் இறுதி ஆபர் விலையை ரூ.7,649 க்கு கொண்டுவர முடியும்.

பிளிப்கார்ட் கோட் சேலில் வேறு என்னென்ன தயாரிப்புகள் மீது மிகப்பெரிய தள்ளுபடிகள் கிடைக்கிறது நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன்ஆனது வெறும் ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் கடந்த ஆண்டு இந்தியாவில் ரூ.44,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அதிகாரப்பூர்வ விலைகுறைப்புகளை பெற்று ரூ.33,999 க்கு விற்கப்பட்டது.

தற்போது பிளிப்கார்ட் கோட் சேலின் ஒரு பகுதியாக நத்திங் போன் 2 மாடல் ஆனது அதன் அசல் அறிமுக விலையில் இருந்து ரூ.15,000 விலைக்குறைப்பை பெற்று ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆப்பிள் ஏர்பாட்ஸை போலவே இந்த விலையும் எந்த விதமான வங்கி அல்லது எக்ஸ்சேன்ஜ் சலுகைகளையும் உள்ளடக்காத நேரடி தள்ளுபடி விலையாகும்.

இதேபோல பிளிப்கார்ட் கோட் சேலில் ஒன்பிளஸ் பேட் மீதும் மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் டேப்லெட்டின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது ரூ.28,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கூடுதலாக, ஆக்சிஸ் வங்கி (Axis Bank), ஐடிஎஃப்சி வங்கி (IDFC Bank) மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் (HDFC bank) கார்டு பயனர்களுக்கு ரூ.1,500 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். இதன் மூலம் ஒன்பிளஸ் பேட் டேப்லெட்டின் இறுதி ஆபர் விலையை ரூ.27,499 ஆக குறைக்க முடியும்.

ஐபோன்கள் மீதான சலுகைகளை பொறுத்தவரை, பிளிப்கார்ட் கோட் சேலில் ஆப்பிள் ஐபோன் 15 மாடல் ரூ.79,900 க்கு பதிலாக ரூ.65,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மாடலானது ரூ.79,900 க்கு பதிலாக ரூ.55,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஆப்பிள் ஐபோன் 13 மாடல் ஆனது ரூ.59,900 க்கு பதிலாக ரூ.51,999 க்கு வாங்க கிடைக்கிறது

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart GOAT Sale 2024 How to Buy Apple AirPods 2nd Generation For Rs 7649 Instead of Rs 12900
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X