Home
Gadgets

அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. 150 இன்ச்.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது Flipkart Freedom Sale 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் புரொஜெக்டர் மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த போர்ட்ரானிக்ஸ் பீம் 490 (Portronics Beem 490) புரொஜெக்டர் மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 490 (Portronics Beem 490) மாடலுக்கு 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை ரூ.12999 விலையில் வாங்கிவிட முடியும்.

அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்..

போர்ட்ரானிக்ஸ் பீம் 490 அம்சங்கள் (Portronics Beem 490 Specifications): அதாவது போர்ட்டபிள் டிசைனில் (Portable Design) உருவாக்கப்பட்டுள்ளது இந்த எல்இடி (LED)ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல். 1920 x 1080 பிக்சல்ஸ் ஃபுல் எச்டி (FHD) ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர்.

அதேபோல் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 490 புரொஜெக்டரில் 6000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி உள்ளது. குறிப்பாக இது மேம்பட்ட பிக்சர் குவாலிட்டி வழங்கும். அதேபோல் இந்த புரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 490 புரொஜெக்டர் மாடலுக்கு 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 16:9 அஸ்பெக்ட் ரேசியோவை (Aspect Ratio) வழங்குகிறது. பின்பு இதில் 150 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் 150 இன்ச் டிஸ்பிளே அளவு கிடைப்பதால் ஒரு மினி தியேட்டர் அனுபவம் கிடைக்கும். அதேபோல் ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) போன்றவற்றை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 490 புரொஜெக்டர் உடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 490 புரொஜெக்டர் ஆனது 5W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (5W Stereo Speakers) உடன் வெளிவந்துள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோமேட்டிக் போகஸ், மற்றும் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) சப்போர்ட் உடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 490 புரொஜெக்டர் வெளிவந்தது.

அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்..

இன்புட் மற்றும் அவுட்புட் போர்ட்களை (Input And Output Ports), இரண்டு எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 490 புரொஜெக்டர் மாடலில் உள்ளன.

குறிப்பாக நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த புரொஜெக்டர் மாடலில் உள்ளன. அதேபோல் இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இன்னும் பல போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர் மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Freedom Sale 2025: Portronics Beem 490 Smart Projector gets 51 percent discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X