வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. குறைந்த விலையில் QLED டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Freedom Sale 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகா (Coocaa) நிறுவனத்தின் 43 இன்ச் QLED கூகுள் ஸ்மார்ட் டிவி மாடலும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் Coocaa 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.15749 விலையில் வாங்கிவிட முடியும்.

Coocaa 43 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள்: ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் Coocaa 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 90% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut),350 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle)உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
1.5ஜிகாஹெர்ட்ஸ் ஏ55 குவாட் கோர் (A55 Quad core) பிராசஸர் உடன் இந்த Coocaa 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் லோ லேடன்சி கேம் மோட் (Low Latency Game Mode) ஆதரவும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிறந்த சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும்.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த Coocaa டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
8ஜிபி மெமரி வசதியுடன் இந்த Coocaa 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் வருகிறது. குறிப்பாக வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரிமோட். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் Coocaa 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் வெளிவந்துள்ளது. இதுதவிர பல்வேறு ஆடியோ மோட்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்.
வைஃபை, ப்ளுடூத், ஆப்டிக்கல் ஆடியோ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், எச்டிஎம்ஐ போரட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் Coocaa 43 இன்ச் டிவியில் உள்ளது. எனவே அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








