அடிச்சு தூக்கிய பிளிப்கார்ட்.. ரூ.11,749 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. DTS ட்ரூசரவுண்ட்.. 30W ஆடியோ.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2025 (Flipkart Freedom Sale 2025) ஆஃபரில் 43 இன்ச் கோடக் டிவி (43 inch KODAK TV) மாடலுக்கு இதுவரை கிடைக்காத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. டிடிஎஸ் ட்ரூசரவுண்ட், 30W ஆடியோ அவுட், லினக்ஸ் டிவி ஓஎஸ் மட்டுமல்லாமல், பெசல்-லெஸ் டிசைனில் ஃபுல்எச்டி ரெசொலூஷன் கொடுக்கிறது. இந்த 43 இன்ச் கோடக் டிவியின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மார்கெட் விலையில் இருந்து 41 சதவீத தள்ளுபடி போக ரூ.13,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் ரூ.1,750 பேங்க் தள்ளுபடி போக மேலும், அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,750 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இந்த பேங்க் தள்ளுபடி ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது.

அதே நேரத்தில் ஐசிஐசிஐ பேங்க் டெபிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால் ரூ.1,250 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. மேலும், ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்க இருக்கிறது. இந்த 43 இன்ட் கோடக் டிவியின் விலையே அடிமட்ட பட்ஜெட்டில் இருப்பதால், ரூ.5,400 வரையில் மட்டும் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது.
கோடக் 43 இன்ச் டிவி அம்சங்கள் (KODAK 43 inch TV Specifications): இதுவொரு ஸ்பெஷல் எடிஷன் (Special Edition) சீரிஸ் மாடலாகும். லினக்ஸ் டிவி ஓஎஸ் (Linux TV OS) மற்றும் குவாட் கோர் (Quad Core) சிப்செட் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொண்ட 43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கொடுக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. ஆடியோவில் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS Trusurround) வருகிறது. அதேபோல டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) உள்ளது. இந்த ஆடியோ டெக்னாலஜிகள் கொண்ட 2 ஸ்பீக்கரகள் மூலம் 30W சவுண்ட் அவுட்புட் பெற்று கொள்ளலாம்.
எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports) மற்றும் வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. லினக்ஸ் ஓஎஸ் கிடைத்தாலும், ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும். இதைவிட கம்மியான விலைக்கு இதே பிராண்டில் 32 இன்ச் டிவி கிடைக்கிறது. இதன் விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கோடக் 32 இன்ச் டிவி அம்சங்கள், விலை (KODAK 32 inch TV Specifications Price): இந்த கேடாக் டிவியில் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டி ரெடி ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. லினக்ஸ் ஓஎஸ் மற்றும் குவாட் கோர் சிப்செட் உள்ளது.
ஆடியோ முந்தைய மாடலில் கிடைத்ததை போலவே இருக்கிறது. 512 எம் ரேம் மற்றும் 4 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கொடுத்து இருக்கிறது. இதிலும் ஓடிடி ஆப்கள், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல வை-பை, ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளையும் கொடுக்கிறது. இப்போது விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த கோடக் 32 இன்ச் டிவியானது மார்கெட் விலையில் இருந்து 46 சதவீத தள்ளுபடி போக ரூ.7,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.800 பேங்க் தள்ளுபடி பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.7,199 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும். இந்த தள்ளுபடியை பெற்று கொள்வதற்கும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








