இன்றே கடைசி.. அள்ளி கொடுக்கும் Flipkart.. ஆஃபரில் 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்? என்ன விலை?
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் பிளாக்ஷிப் சேல் (Flagship Sale) என்கிற சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்று (ஆகஸ்ட் 15) நிறைவுபெறும். குறிப்பாக இன்று சிறப்பு விற்பனை இறுதி நாள் என்பதால் பல முன்னணி நிறுவனங்களின் டிவி, ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல சாதனங்களை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும். அதன்படி இன்று மிகவும் அதிகம் எதிர்பார்த்த 4கே ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (KODAK 7XPro Ultra HD (4K) LED Smart Android TV) மாடலுக்கு தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் இந்த 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ மாடலுக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தேர்வு செய்யபப்பட்ட வாங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ மாடலை ரூ.18749 இருந்தால் வாங்கிவிட முடியும். இப்போது இந்த கோடாக் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கோடாக் 7எக்ஸ் ப்ரோ டிவி அம்சங்கள் (KODAK 7X Pro 4K Smart TV specifications): 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.
அதேபோல் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53 (ARM Cortex-A53) பிராசஸர் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி. இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த டிவியை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டிவி வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டிவியில் பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். குறிப்பாக கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
குறிப்பாக 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவியில் 4கே எச்டிஆர் 10 ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டிவி. எனவே ஆப்ஸ்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட் உடன் இந்த கோடாக் டிவி வெளிவந்துள்ளது.

மேலும் சோனி லிவ், பிரைம் வீடியோ, யூடியூப் போன்ற தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட். பின்பு 24 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பான அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.
photo courtesy: jagran.com, KODAK


Click it and Unblock the Notifications








