வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.23000-க்கு 55 இன்ச் டிவி.. தீபாவளி ஆஃபர்ல 4K மாடல்.. டால்பி ஆடியோ.. 24W ஸ்பீக்கர்!
தீபாவளிக்கு 55 இன்ச் டிவி வாங்க திட்டமிட்டிருந்தால், பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் (Flipkart Diwali Sale) 64 சதவீத டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.23000 பட்ஜெட்டில் கிடைக்கும் 55 இன்ச் ஐபால்கன் 4K டிவி (55 inch iFFALCON 4K TV) ஆப்ஷனில் எடுங்கள். ஏனென்றால், இந்த டிவியில் டால்பி ஆடியோ, கூகுள் டிவி, 24W ஸ்பீக்கர்கள் போன்ற பல்வேறு பீச்சர்கள் கிடைக்கின்றன.
தீபாவளி வரட்டும் டிவி வாங்கிக் கொள்ளலாம், அப்போதுதான் அதிக டிஸ்கவுண்ட் கிடைக்கும், இப்படி பல கஸ்டமர்கள் காத்திருந்து வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இவர்களில் 55 இன்ச் டிவிகளை தேடிக்கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு அடிமட்ட பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் ஐபால்கன் 55 இன்ச் டிவி கிடைக்கிறது.

55 இன்ச் ஐபால்கன் 4கே டிவி விற்பனை (55 inch iFFALCON 4K TV Sale): இந்த ஐபால்கன் டிவியின் விலையானது, இப்போது பிளிப்கார்ட் தளத்தில் 64 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.25,999ஆக இருக்கிறது. இந்த விலையிலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் எஸ்பிஐ டெபிட் கார்டுக்கு ரூ.1500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
இதே எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால், ரூ.2500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,237 டிஸ்கவுண்ட் மற்றும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.1273 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, வெறும் ரூ.23,999 பட்ஜெட்டில் இந்த 55 இன்ச் ஐபால்கன் 4K டிவியை வாங்கலாம்.
இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை இந்த டிவி பேக் செய்துள்ளது? இந்த ஐபால்கன் டிவியில் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆகவே, 4K தரத்தில் வீடியோ அவுட்புட் கிடைக்கிறது. எச்டிஆர்10 (HDR10) கொண்ட குயிக் எச்டிஆர் ரென்டரிங் கிடைக்கிறது.

ஒரிஜினல் ரெசொலூஷன் வீடியோவை கொடுக்க இன்டலிஜென்ட் கிளாரிட்டி என்ஹான்ஸ்மெண்ட் சப்போர்ட் உள்ளது. அதேபோல கலர் அக்கியூரசி கொடுக்க டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் கிடைக்கிறது. மெட்டாலிக் பெசல்லெஸ் டிசைனில் பிரீமியம் பாடி வருகிறது. மேலும், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 270 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
இந்த டிவியில் வீடியோ பீச்சர்களை போலவே ஆடியோ பீச்சர்களும் மிரள விடுகின்றன. டால்பி ஆடியோ மட்டுமல்லாமல், டால்பி அட்மோஸ் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஆடியோவுடன் 24 W ஸ்பீக்கர்கள் வருகின்றன. இந்த அவுட்புட் கொடுக்க 2 ஸ்பீக்கர்கள் பேக் செய்யப்பட்டு இருக்கின்றன. வழக்கமான சவுண்ட் மோட்களும் இருக்கின்றன.
கூகுள் டிவி ஓஎஸ் உடன் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், இன்பில்ட் குரோம்காஸ்ட் சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல கூகுள் கிட்ஸ் ஆப்ஷன் கிடைக்கிறது. இந்த ஐபால்கன் டிவிக்கு 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்த முடியும். ஆகவே, ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் இருக்கின்றன.
இந்த 55 இன்ச் டிவியின் வயர்லெஸ் கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை மற்றும் ப்ளூடூத் கிடைக்கிறது. போர்ட்களை பார்க்கையில், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, எல்ஏன், கேபிள், ஏவி இன், ஹேட்போன் ஜாக் மற்றும் ஆப்டிகல் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த 55 இன்ச் ஐபால்கன் 4கே டிவிக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ப மாடலாகவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








