வீட்டுக்கு 2 டிவி ஆர்டர்.. ரூ.22000-க்கு 55 இன்ச் டிவி.. ரூ.16000-க்கு 43 இன்ச்.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ!
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் உத்சவ் விற்பனை (Flipkart Big Shopping Utsav Sale) தொடங்கிவிட்டது. அக்டோபர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 13 ஆம் தேதி வரையில் நடக்கும் இந்த விற்பனையில் 43 இன்ச் மற்றும் 55 இன்ச் டிவிகளுக்கு இதுவரையில் கிடைக்காத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதில் ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் டாப் 3 டிவிகளை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம். தாம்சன், ரியல்மி மற்றும் ஐபால்கன் டிவிகள் இதில் இருக்கின்றன.
43 இன்ச் தாம்சன் பீனிக்ஸ் டிவி அம்சங்கள், விலை (43 inch Thomson Phoenix TV Specifications Price): இதுவொரு பீனிக்ஸ் சீரிஸ் மாடலாகும். இந்த டிவியில் 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் கொண்ட கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே வருகிறது. டால்பி விஷன், எச்டிஆர்10, எச்எல்சி டிஸ்பிளே பீச்சர்கள் வருகிறது. டால்பி அட்மோஸ் ஆடியோ பீச்சர் வருகிறது.

டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் சப்போர்ட் கொண்ட 40W ஆடியோ அவுட் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் மற்றும் மீடிடெக் சிப்செட் உள்ளது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். இந்த டிவியின் விலை ரூ.20,499ஆக இருக்கிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.3,500 டிஸ்கவுண்ட் போக ரூ.16,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
43 இன்ச் ரியல்மி டெக்லைப் சினிசோனிக் கியூ டிவி அம்சங்கள், விலை (realme TechLife CineSonic Q TV Specifications Price): இதுவொரு சினிசோனிக் கியூ மாடலாகும். இந்த டிவியிலும் 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வருகிறது. எச்டிஆர்10, டால்பி விஷன் பீச்சர்கள் வருகிறது. ஆடியோவில் டால்பி அட்மோஸ் மற்றும் சினிமாடிக் சரவுண்ட் சவுண்ட் டெக்னாலஜி வருகிறது.

40W ஆடியோ அவுட் கிடைக்கிறது. மீடியாடெக் சிப்செட் மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி உள்ளது. இந்த சினிசோனிக் கியூ டிவியின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக ரூ.20,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆக்சிஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்தி டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம்.
55 இன்ச் ஐபால்கன் டிவி அம்சங்கள், விலை (55 inch iFFALCON TV Specifications Price): இந்த ஐபால்கன் டிவியானது U64 சீரிஸ் மாடலாகும். இந்த டிவியில் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K அல்ட்ரா எச்டி எல்இடி டிஸ்பிளே வருகிறது. டைனாமிக் கலர் என்ஹான்ஸ் மென்ட் மற்றும் இன்டலிஜென்ட் கிளாரிட்டி என்ஹான்ஸ்மென்ட் வருகிறது. எச்டிஆர்10 பீச்சர் பேக் செய்யப்பட்டுள்ளது.

60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இந்த 55 இன்ச் டிவியில் டால்பி ஆடியோ வருகிறது. ஆனால், 24W ஆடியோ அவுட் கொண்ட ஸ்பீக்கர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் கிடைக்கிறது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் குரோம்காஸ்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. முந்தைய டிவிகளை போலவே 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது.
இந்த 55 இன்ச் ஐபால்கன் டிவியின் விலை ரூ.25,999 பட்ஜெட்டில் விலைக்கு வந்துள்ளது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.3,250 டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.22,749 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. கிட்டத்தட்ட 43 இன்ச் டிவிகள் கிடைக்கும் விலையில் வருகிறது. இந்த டிஸ்கவுண்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications