இதுதான் ஆஃபர்.. ரூ.33,000 மதிப்புள்ள பிரபலமான டிவியை கம்மி விலையில் விற்பனை செய்யும் Flipkart.. வுட்றாதீங்க..
பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் (flipkart big saving days) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், ஸ்பீக்கர்கள், டேப்டெல் உள்ளிட்ட பல சாதனங்களை கம்மி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இந்த சிறப்பு விற்பனையில் பிரபலமான 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் (MOTOROLA Envision) ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி (43FHDADMWKBE) ஆனது தற்போது 45 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

இந்த 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் ஸ்மார்ட் டிவி ஆனது முன்பு ரூ.33,000-விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடியின் மூலம் இந்த டிவியை ரூ.17,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.
43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1920 x 1080 பிக்சல், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக பெசல்-லெஸ் டிஸ்பிளேவைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
இந்த 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் ஸ்மார்ட் டிவி ஆனது மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர் உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் கிராபிக்ஸ் யூனிட் சேர்ந்து இந்த டிவியை சீராகவும் விரைவாகவும் இயக்க உதவுகிறது. அதேபோல் இந்த டிவி காட்சிகளுக்குத் தெளிவான மற்றும் துல்லியமான வண்ணங்களை வழங்குகிறது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதி உள்ளது.
மேலும் இந்த மோட்டோரோலா என்விஷன் ஸ்மார்ட் டிவியில் 10,000க்கும் மேற்பட்ட ஆப்ஸை அணுகலாம். குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த மோட்டோரோலா டிவி வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் இன்-பில்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா டிவி.
நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட அனைத்து ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். பின்பு ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் ஸ்மார்ட் டிவி.

வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா என்விஷன் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக கம்மி விலையில் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் ஸ்மார்ட் டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.
அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது சமீபத்தில் மோட்டோ ஜி14 எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது மோட்டோரோலா நிறுவனம்.
குறிப்பாக மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, 2ஜிகாஹெர்ட் யுனிசாக் டி616 ஆக்டோ-கோர் 12என்எம் பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 50எம்பி பிரைமரி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போன் ரூ.9,999-விலையில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








