Home
Gadgets

கொளுத்தும் வெயில்.. சரியான நேரத்தில் ஆஃபர் போட்ட பிளிப்கார்ட்.. மலிவு விலையில் ஏர் கூலர்கள்..

பொதுவாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் கோடை வெயில் அதிகம் சுட்டு எரிக்கும். ஆனால் இந்த வருடம் பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்டிவதைக்கத் தொடங்கி விட்டது. அதுவும் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.

அதேபோல் ஏசி, ஏர் கூலர், மினி ஏசி போன்ற சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் சரியான நேரத்தில் ஏர் கூலர் மாடல்களுக்கு ஆஃபர் கொடுத்துள்ளது. அதாவது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் (Flipkart Big Saving Days) எனும் சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது.

சரியான நேரத்தில் ஆஃபர் போட்ட பிளிப்கார்ட்.. மலிவு விலையில ஏர் கூலர்கள்

இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஏர் கூலர் மாடல்களுக்கு (air coolers) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது ஆஃபரில் கிடைக்கும் ஏர் கூலர் மாடல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தாம்சன் 28 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் (Thomson 28 L Room/Personal Air Cooler) மாடலுக்கு அமேசானில் 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.3,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 28 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி, 2,600 ஆர்பிஎம் மோட்டார், 824 cfm ஏர் டெலிவரி உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த தாம்சன் ஏர் கூலர் வெளிவந்தது.

சரியான நேரத்தில் ஆஃபர் போட்ட பிளிப்கார்ட்.. மலிவு விலையில ஏர் கூலர்கள்

பஜாஜ் 36எல் ஏர் கூலர் (BAJAJ 36 L Room/Personal) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6,049 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 35 லிட்டர் கெப்பாசிட்டி,ஏர் கூலர் 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 1300 m3/h ஏர் டெலிவரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் பஜாஜ் 36எல் ஏர் கூலர் மாடலில் உள்ளது.

கிராம்ப்டன் 60 எல் டெசர்ட் ஏர் கூலர் (Crompton 60 L Desert Air Cooler) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. 4000 m3/hr ஏர் டெலிவரி, 60 லிட்டர் கெப்பாசிட்டி, ஆட்டோ-ஸ்விங் (auto-swing)வசதி போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன.

ஓரியண்ட் எலக்ட்ரிக் 90 எல் டெசர்ட் ஏர் கூலர் (Orient Electric 90 L Desert Air Cooler) மாடலுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 3500 m3/hஏர் டெலிவரி, 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 90 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.

சரியான நேரத்தில் ஆஃபர் போட்ட பிளிப்கார்ட்.. மலிவு விலையில ஏர் கூலர்கள்

வி-கார்டு 88 எல் டெசர்ட் ஏர் கூலர் (V-Guard 88 L Desert Air Cooler) ஆனது 88 லிட்டர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது. இதற்கு இரண்டு வருட வாரண்டி கூட உள்ளது. மேலும் இந்த ஏர் கூலர் 4250 m3/h ஏர் டெலிவரி கொடுக்கும். பின்பு இது இன்வெர்ட்டர் இணக்கமான ஏர் கூலர் ஆகும். அதேபோல் இந்த ஏர் கூலர் 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection). தற்போது பிளிப்கார்ட்டில் இந்த சாதனத்தை ரூ.11,917 விலையில் வாங்கலாம்.

சிம்பொனி 35 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் (Symphony 35 L Room/Personal Air Cooler) மாடலுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 35 லிட்டர் கெப்பாசிட்டி, டச் ஸ்கிரீன் பேனல், வாய்ஸ் அசிஸ்ட், i-PURE தொழில்நுட்பம் மற்றும் பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்த சிம்பொனி ஏர் கூலர் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
flipkart big saving days: best air coolers available at discounted prices
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X