Home
Gadgets

வெளுத்துக் கட்டும் தீபாவளி சேல்.. Samsung 4கே டிவிக்கு அதிரடி தள்ளுபடி.. Q-சிம்பொனி ஆடியோ.. எந்த மாடல்?

தீபாவளியை முன்னிட்டு பிளிப்கார்ட் தளத்தில் big festive dhamaka எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் கிரிஸ்டல் 4கே விவிட் 43 இன்ச் டிவி (Samsung Crystal 4K Vivid 43 inch TV) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட் டிவி மேம்பட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கிரிஸ்டல் 4கே விவிட் 43 இன்ச் டிவி ஆனது முன்பு ரூ.44,900 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.22240 விலையில் வாங்கிவிட முடியும்.

Samsung 4கே டிவிக்கு அதிரடி தள்ளுபடி.. Q-சிம்பொனி ஆடியோ.. எந்த மாடல்?

சாம்சங் கிரிஸ்டல் 4கே விவிட் 43 இன்ச் டிவி அம்சங்கள் (Samsung Crystal 4K Vivid 43 inch TV Specifications): 4கே அல்ட்ர எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்கள், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), 50Hz ரெஃப்ரெஷ் ரேட், பியூர் கலர் (Pure Color) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் கிரிஸ்டல் பிராசஸர் 4கே (Crystal Processor 4K) சிப்செட் உடன் இந்த சாம்சங் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு டைசன் ஓஎஸ் (Tizen OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

குறிப்பாக 20W ஆடியோ அவுட்புட் வருகிறது. மல்டி வாய்ஸ் அசிஸ்டன்ட் (Multi Voice Assistant), வீடியோ காலிங் செய்ய ஸ்லிம்பிட் கேமரா (SlimFit Cam), ஸ்மார்ட் ரிமோட், ஐஓடி ஹப் (IoT Hub), ஐஓடி லைட் சென்சார்கள் (IoT Light Sensors) உள்ளிட்ட ஸ்மார்ட் அம்சங்கள் இருக்கின்றன.

இந்த சாம்சங் டிவியில் அலெக்சா (Alexa), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant )மற்றும் பிக்ஸ்பி (Bixby) ஆகியவற்றை ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 3டி சரவுண்ட் சவுண்டிங் அனுபவத்துக்காக 2 விர்ச்சுவல் ஸ்பீக்கர்களுடன் ஒடிஎஸ் லைட் (OTS Lite) கொடுக்கப்பட்டிருக்கிறது.

Samsung 4கே டிவிக்கு அதிரடி தள்ளுபடி.. Q-சிம்பொனி ஆடியோ.. எந்த மாடல்?

அதோடு டைனமிக் சவுண்ட் எஃபெக்ட்டுக்காக அடாப்டிவ் சவுண்ட் சப்போர்ட் வருகிறது. கேமிங் அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode) மற்றும் மோஷன் எக்ஸ்சலரேட்டர் (Motion Xcelerator) வருகிறது. இந்த டிவியின் சவுண்ட்பாரில் கியூ-சிம்பொனி (Q-Symphony) சப்போர்ட் உள்ளது.

மேலும், எச்டிஎம்ஐ போர்ட், ஒரு யூஸ்பி போர்ட், ஈதர்நெட், டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் ஜாக், ஆர்எஃப் (RF) ஆகியவை வருகின்றன. ப்ளூடூத் மற்றும் வை - பை கனெக்டிவிட்டி வருகிறது. அதேபோல் ஆட்டோ பவர் ஆஃப், ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) உள்ளிட்ட அம்சங்களும் இந்த அசத்தலான சாம்சங் டிவி வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
flipkart big festive dhamaka sale 2025: 46 percent discount on Samsung Crystal 4K Vivid 43 inch TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X