ரூ.8,899 போதும்.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. 24W ஸ்பீக்கர்கள். ஆஃபரில் ஆண்ட்ராய்டு டிவி.. எந்த மாடல்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் தளத்தில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த விலையில் சாதனங்களை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது நல்லது
அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த தாம்சன் 9ஏ சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டிவி முன்பு ரூ.14,499 விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த டிவியை ரூ.8,899 விலையில் வாங்க முடியும்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1750 வரை தள்ளுபடி பெறமுடியும். குறிப்பாக இந்த டிவி அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது தாம்சன் 9ஏ சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
32-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Thomson 9A Series HD Ready LED Smart Android TV) ஆனது 1366 x 768 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ53 (ARM Cortex-A53) பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த 32-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இந்த டிவியில் மாலி-450 (Mali-450) கிராபிக்ஸ் கார்டு மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக தரமான வடிவமைப்பு மற்றும் அட்டகாசமான மென்பொருள் வசதியுடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். அதேபோல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த 32-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த டிவியில் உள்ளது.
24 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது இந்த32-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி. குறிப்பாக சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிவி கருப்பு நிறத்தில் கிடைக்கும்.

பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த 32-இன்ச் தாம்சன் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் பிரைம் வீடியோ, யூடியூப், சோனி லிவ் ஆகிய ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








