அடிச்சான் பாரு தீபாவளி ஆஃபர்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. கம்மி விலையில் Redmi 55 இன்ச் டிவி.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தற்போது நடைபெறும் big bang diwali sale எனும் சிறப்பு விற்பனையில் தான் தற்போது ரெட்மி டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ரெட்மி (Redmi) 55 இன்ச் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரெட்மி 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி (Redmi 55 inch 4K Smart Fire TV) மாடலுக்கு 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.23499 விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள் (Redmi 55 inch 4K Smart Fire TV Specifications): 4கே டிஸ்பிளே (4K display) உடன் ரெட்மி 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 60Hz refresh rate) உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.
விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த ரெட்மி 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலில் உள்ளன.
ரெட்மி 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடல் ஆக்டோ-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-core Cortex A55 processor) உடன் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ஃபயர் ஓஎஸ் 7 (Fire TV OS 7) மூலம் இந்த ரெட்மி 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி இயங்கும். அதேபோல் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளது.
அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் மியூசிக்கிற்கான ஷார்ட்கட் பட்டன்கள் கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரெட்மி 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. பின்பு இந்த டிவியின் ஆடியோ வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
அதன்படி டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் (DTS: Virtual X) போன்ற ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி டிவி. அதுவும் இதில் 30W ஸ்பீக்கர்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








