ப்ளிப்கார்ட் சாம்சங் கார்னிவல் விற்பனை : ஸ்மார்ட்போன்கள் முதல் டிவிக்கள் வரை.!

|

ப்ளிப்கார்ட் நிறுவனம் அதன் சாம்சங் கார்னிவல் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த 'சாம்சங் கார்னிவல்' ஆனது ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை ப்ளிப்கார்டில் நடைபெறும். இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் முதல் டிவிக்கள் வரை சாம்சங் நிறுவன தயாரிப்புகளுக்கு பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

ஸ்மார்ட்போன்கள் மீதான தள்ளுபடிகளை பார்த்தால் பயனர்கள் ரூ.5,000/- விலைகுறைப்பில் சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனை இதன் விற்பனையில் வாங்கலாம். இதற்கிடையில், சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் 64ஜிபி மாறுபாடு தற்போது தள்ளுபடி விலையில் ரூ. 14,900 ரூபாய்க்கு கிடைக்கிறது.

கேலக்ஸி ஆன் 7

கேலக்ஸி ஆன் 7

மேலும், கேலக்ஸி ஆன் 7 மற்றும் கேலக்ஸி ஆன் 5 ஆகியவை முறையே ரூ.800 மற்றும் ரூ.2,300/- விலைகுறைப்பு நிகழ்த்தப்பட்டு முறையே ரூ.7,690/- மற்றும் ரூ.6,690/- என்ற விலைக்கு விற்பனைக்கு உள்ளது.

எக்ஸ்சேன்ஜ் சலுகையும்

எக்ஸ்சேன்ஜ் சலுகையும்

இதுமட்டுமின்றி கூடுதலாக, இந்த இ-காமர்ஸ் தளம் ரூ.500 முதல் ரூ.3,000 வரையான பழைய தொலைபேசிகளுக்கு பரிமாற்ற வாய்ப்பையும் அதாவது எக்ஸ்சேன்ஜ் சலுகையும் வழங்குகிறது.

சாம்சங் கியர்

சாம்சங் கியர்

ஸ்மார்ட் வியரபில்ஸ் பற்றி பேசும் போது பயனர்கள் கியர் எஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் மீது 45 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும், இது ரூ.14,900/- ஆரம்ப விலை கொண்டு வருகிறது. அதோடு, சாம்சங் கியர் விஆர்-க்கு 51 சதவிகிதமும், விஆர் ஹெட்செட் இப்போது ரூ.3,999 விலையிலும் கிடைக்கும்.

எல்இடி டிவி

எல்இடி டிவி

ப்ளிப்கார்டின் படி, திருவிழாவின் போது சாம்சங் டி.வி.க்களின் விலை 50 சதவிகிதம் வரை குறைக்கப்படும். சாம்சங் 32 அங்குல எச்டி ரெடி எல்இடி டிவி, சாம்சங் 24 இன்ச் எச்டி ரெடி எல்இடி டிவி, சாம்சங் 60 அங்குல அல்ட்ரா எச்டி (4 கே) ஸ்மார்ட் எல்இடி டிவி, சாம்சங் 40 அங்குல முழு எச்டி எல்இடி டிவி, சாம்சங் 49 அங்குல அல்ட்ரா எச்டி (4கே) ஸ்மார்ட், கர்வுடு எல்இடி டிவி மற்றும் பல இந்த சலுகையின் கீழ் அடங்கும்.

ஏசி

ஏசி

வீட்டு உபகரணங்களை பொறுத்தமட்டில், பயனர்கள் ரெப்ரிஜிரேட்டர்களுக்கு ரூ.11,390 விலை வரை தள்ளுபடி பெறலாம். தவிர, குளிர்சாதனப்பெட்டிகள், தொலைக்காட்சிகள், மைக்ரோஓவன் மற்றும் ஏசிகளுக்கு நோ காஸ்ட் ஈ.எம்.ஐ சலுகையும் பெறலாம். ரூ.1,500 மதிப்புள்ள இலவச ஏசி நிறுவலையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்முதல் மீது சிட்டி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் கூடுதல் 10 சதவிகிதம் கேஷ் பேக் ஆபர் பெறலாம்.

Best Mobiles in India

English summary
Flipkart announces Samsung Carnival Sale: Here are some top deals on smartphones, TVs, wearables and more. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X