Home
Gadgets

வாட்டி வதைக்கும் வெயில்.. பட்ஜெட் விலையில் பிராண்டட் 5 ஏர் கூலர் ரெடி.. ஆர்டர் போட்ருங்க..

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பிப்ரவரி மாதம் இறுதி முதல் இன்னும் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் கோடை காலத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்க வாய்ப்பு உள்ளது. எனவே பல்வேறு மக்கள் இப்போதே ஏர் கூலர்களை (Air Coolers) வாங்கத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக கோடை காலத்தில் ஏர் கூலர்களை விலை சற்று அதிகமாகவே இருக்கும். எனவே இப்போதே ஒரு நல்ல ஏர் கூலர் மாடல்களை வாங்குவது நல்லது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஏர் கூலர் மாடல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வாட்டி வதைக்கும் வெயில்.. பட்ஜெட் விலையில் பிராண்டட்  5 ஏர் கூலர் ரெடி

1.வோல்டாஸ் 35 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் (Voltas 36 L Room/Personal Air Cooler) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.6299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த ஏர் கூலரை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.4799 விலையில் இந்த சாதனத்தை வாங்கிவிட முடியும்.

குறிப்பாக வோல்டாஸ் 35 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் ஆனது 36 லிட்டர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது. பின்பு இதற்கு ஒரு வருட வாரண்டி கூட உள்ளது. மேலும் இந்த ஏர் கூலர் 1350 RPM ஏர் டெலிவரி கொடுக்கும். அதேபோல் இந்த ஏர் கூலர் 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection). குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

2.கென்ஸ்டார் 60 எல் டெசர்ட் ஏர் கூலர் (Kenstar 60 L Desert Air Cooler) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.8199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே கென்ஸ்டார் 60 எல் டெசர்ட் ஏர் கூலர் மாடலை ரூ.6699 விலையில் வாங்கிவிட முடியும்.

60 லிட்டர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது கென்ஸ்டார் 60 எல் டெசர்ட் ஏர் கூலர். அதேபோல் 4300 m3/h ஏர் டெலிவரி கொடுக்கும் இந்த ஏர் கூலர் சாதனம். பின்பு ஹை-டென்சிட்டி ஹனிகோம்ப் பேட் இதில் உள்ளது. குறிப்பாக இது நீண்ட நேர கூலிங்கை தக்க வைத்து கொடுக்கும். மேலும் இது 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), டஸ்ட் நெட் பில்டர், 3 ஸ்பீடு கண்ட்ரோல் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

3.வி-கார்டு அரிடோ டி50 W ஏர் கூலர் (V-Guard Arido D50 W Air Cooler) ஆனது அமேசான் தளத்தில் ரூ.8999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஏர் கூலரை வாங்கினால் 2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.6,999 விலையில் இந்த வி-கார்டு அரிடோ டி350 W ஏர் கூலர் மாடலை வாங்கிவிட முடியும்

இந்த வி-கார்டு அரிடோ டி50 W ஏர் கூலர் 4000 m3/h ஏர் டெலிவரி கொடுக்கும்.பின்பு இது இன்வெர்ட்டர் இணக்கமான ஏர் கூலர் ஆகும். அதேபோல் இது 3 ஸ்பீடு செட்டிங்ஸ் ஆதரவு கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆனது தேன்கூடு பட்டைகள் (honeycomb pads) உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 50 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி இதில் உள்ளது.

வாட்டி வதைக்கும் வெயில்.. பட்ஜெட் விலையில் பிராண்டட்  5 ஏர் கூலர் ரெடி

4.கிராம்ப்டன் 75 எல் டெசர்ட் ஏர் கூலர் (Crompton 75 L Desert Air Cooler) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.10899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.
குறிப்பாக இந்த சாதனம் 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 75 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி, இன்வெர்ட்டர் இணக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.

5.சிம்பொனி டயட் 22டி பர்சனல் ஏர் கூலர் (Symphony Diet 22T Personal Air Cooler) மாடலை அமேசான் தளத்தில் ரூ.6,691 விலையில் வாங்கிவிட முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. குறிப்பாக இதில் 50 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி இதில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Five Budget Air Coolers You Can Buy to Keep Cool in Summer: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X