Home
Gadgets

ஃபிட்பிட் சார்ஜ் 4 ஃபிட்னஸ் பேண்ட் சாதனம் இந்தியாவில் அறிமுகம்.!

ஃபிட்பிட் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அருமையான சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் புதிய சார்ஜ் 4 ஃபிட்னஸ் டிராக்கர் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

சார்ஜ் 4 ஃபிட்னஸ் டிராக்கர்

சார்ஜ் 4 ஃபிட்னஸ் டிராக்கர்

இந்த புதிய சாதனம் ஆனது 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபிட்பிட் சார்ஜ் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். இப்போது இந்த சார்ஜ் 4 ஃபிட்னஸ் டிராக்கர் சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 ஜிபிஎஸ் ஸ்பாடிஃபை போன்ற வசதி

குறிப்பாக இந்த புதிய ஃபிட்பிட சார்ஜ் 4 மாடலில் பில்ட் இன் ஜிபிஎஸ் ஸ்பாடிஃபை போன்ற வசதிகளை கொண்டுள்ளது, மேலும் ஸ்விம் ப்ரூஃப் வடிவமைப்பு, இன்டக்டிவ் பட்டன்,ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் ஸ்கீரின், பிரைட்,கிரிஸ்ப் தொடுதிரை வசதி கொண்டடிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.

சாதனத்தின் டிஸ்ப்ளே

இந்த சாதனத்தின் டிஸ்ப்ளே இயற்கை வெளிச்சமுள்ள சூழலிலும் எளிமையாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

ஃபிட்பிட் சார்ஜ் 4 ஃபிட்னஸ்

ஃபிட்பிட் சார்ஜ் 4 ஃபிட்னஸ் சாதனத்தில் ஃபிட்பிட் பர்ஸ்பல்ஸ் 24/7 இதய துடிப்பு டிராக்கிங் வசதி, உடற்பயிற்சி, பவர் யோகா, நடைபயிற்சி என பல்வேறு உடல் அசைவுகளை டிராக் செய்யும் வசதி உளளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஃபிட்பிட ஸ்மார்ட்வாட்ச்

மேலும் இதற்கு முன்னதாக ஃபிட்பிட ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த பல்வேறு அம்சங்கள் புதிய ஃபிட்னஸ் சாதனத்தில் ஃபிட்பிட வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை ரூ. 14,999 என நிர்ணயம்

ஃபிட்பிட் சார்ஜ் 4 பிளாக் சாதனம் ஆனது ரோஸ்வுட் மற்றும் ஸ்டாம் புளுஃபிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 ஃபிட்பிட் சார்ஜ் 4 ஸ்பெஷல்

கிரானைட் ரிஃப்ளெக்டிவ் / பிளாக் வோவென் பேண்ட் மற்றும் கிளாசிக் பிளாக் பேண்ட் கொண்ட ஃபிட்பிட் சார்ஜ் 4 ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Fitbit Charge 4 launched in India And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X