Home
Gadgets

ஆளுக்கு 2 வாங்கும் விலை.. 1 வருட பேட்டரி லைஃப், IPX4, Google Fast Pair, ரிங் மோட் உடன் Noise Tag 1 அறிமுகம்!

ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் விற்பனையில் பட்டையை கிளப்பும் பிராண்ட் ஆன நாய்ஸ் (Noise) நிறுவனம், ஸ்மார்ட் டேக் பிரிவிற்குள் நுழைந்துள்ளது. ஆப்பிள் ஏர்டேக், மோட்டோரோலா ஸ்மார்ட் டேக் மற்றும் மிகவும் சமீபத்தில் அறிமுகமான ஜியோடேக் கோ ஆகியவைகளுக்கு போட்டியாக நாய்ஸ் டேக் 1 (Noise Tag 1) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) உடன் இணக்கமான இந்தியாவின் முதல் உலகளாவிய டேக் (Universal Tag) என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டேக் - கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க் மற்றும் ஆப்பிளின் ஃபைண்ட் மை நெட்வொர்க் ஆகிய இரண்டிலுமே வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

ஆளுக்கு 2 வாங்கும் விலை.. 1 வருட பேட்டரி லைஃப்..  Noise Tag 1 அறிமுகம்

ஐபிஎக்ஸ்4 ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ஸ் உடன் வரும் நாய்ஸ் டேக் 1-ன் விலை நிர்ணயம் என்ன? இது வேறு என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? எந்தெந்த தளங்களின் வெளியாக வாங்க கிடைக்கும்? என்னென்ன கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

நாய்ஸ் டேக் 1 ஸ்மார்ட் டேக்கின் விரிவான அம்சங்கள்: நாய்ஸ் டேக் 1 என்பது சாவிகள், லக்கேஜ்கள், பணப்பை மற்றும் பல அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கண்காணிக்க உதவும் ஸ்மார்ட் டேக் ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட் டேக் ஆனது ஆண்ட்ராய்டு போன்களுக்கான கூகுள் பாஸ்ட் பேர் (Google Fast Pair) தொழில்நுட்பம் மற்றும் பைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கையும் (Find My Device Network) ஆதரிக்கிறது

கூடவே ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களுக்கான ஆப்பிளின் பைண்ட் மை நெட்வொர்க்-க்கான ஆதரவையும் கொண்டுள்ளது. நாய்ஸ் டேக் 2 ஆனது மிகவும் சத்தமான 90dB ஒலியை தூண்டுவதன் மூலம் - தொலைந்துபோன அல்லது காணாமல் போன பொருட்களை கண்டறிய உதவும் 'ரிங் மோட்' அம்சத்தையும் கொண்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இணைக்கப்பட்ட பொருளில் இருந்து நாய்ஸ் ஸ்மார்ட் டேக் துண்டிக்கப்பட்டால், லாஸ்ட் மோட் அம்சத்தின் வழியாக பயனர்களின் ஸ்மார்ட்போனுக்கு ஆட்டோமேட்டிக் நோட்டிபிகேஷன்கள் அனுப்பி வைக்கப்படும்.

நாய்ஸ் டேக் 1 ஸ்மார்ட் டேக்கில் உள்ள நெட்வொர்க் மோட் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களின் மிகப்பெரிய நெட்வொர்க்கை பயன்படுத்தி, உடனடி வரம்பிற்கு வெளியே இருந்தாலும் தொலைந்த பொருட்களை கண்டறிய உதவுகிறது. நாய்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட் டேக் ஒரு வருட பேட்டரி லைஃப்பை வழங்கும். கடைசியாக இது கூடுதல் பாதுகாப்பிற்காக வாட்டர் ஸ்பிளாஷ்களை எதிர்க்கும் வகையில் ஐபிஎக்ஸ்4 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் நாய்ஸ் டேக் 1 ஸ்மார்ட் டேக்கின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: நாய்ஸ் டேக் 1 ஸ்மார்ட் டேக்கின் விலை ரூ.1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது நாய்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஆன கோநாய்ஸ்.காம் (gonoise.com) வழியாக வாங்க கிடைக்கிறது.

நாய்ஸ் டேக் 1 ஸ்மார்ட் டேக் ஆனது மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: ஐவரி, மிட்நைட் மற்றும் சார்கோல். நாய்ஸ் நிறுவனம் ஆனது அதன் நாய்ஸ் டேக் 1 யுனிவர்சல் ஸ்மார்ட் டேக் மீது 1 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நாய்ஸ் டேக் 1 எப்படி இந்தியாவின் முதல் யுனிவர்சல் ஸ்மார்ட் டேக் என்று தன்னை குறிப்பிடுகிறதோ அதேபோல கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கிற்கான ஆதரவை கொண்ட இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு டிராக்கர் என்று கூறி ஜியோடேக் கோ (JioTag Go) அறிமுகமானது.

இது கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் ரூ..1,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இது அமேசான் இந்துமா, ஜியோமார்ட் இ-ஸ்டோர் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் மை ஜியோ ஸ்டோர்கள் வழியாக பிளாக், ஆரஞ்சு, ஒயிட் மற்றும் யெல்லோ என மொத்தம் 4 கலர்களில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
First universal smart tag compatible with Android iOS Noise Tag 1 Launched in India Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X