அப்படி இறங்கி வாங்க.. ரூ.10,000 விலை குறைப்பு.. மொபைல் விலைக்கு இறங்கிய Samsung-ன் ஸ்மார்ட் ரிங்!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ரிங் (Samsung Galaxy Ring) தற்போது ரூ.10,000 தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் இந்த முதல் ஸ்மார்ட் ரிங்கின் (Smart Ring) அசல் விலை என்ன? ரூ.10,000 விலை குறைப்பிற்கு பிறகான ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி ரிங்கின் அசல் வெளியீட்டு விலை ரூ.38,999 ஆகும். தற்போது ரூ.10,000 தள்ளுபடிக்கு பின்னர் இதன் விலை ரூ.28,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ரிங் மீது இவ்வளவு பெரிய தள்ளுபடி அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த தள்ளுபடி சாம்சங் ஷாப் ஆப் அல்லது சாம்சங் இணையதளம் வழியாக அணுக கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை பெற, நீங்கள் GALAXYRING என்கிற கூப்பன் கோட்-ஐ பயன்படுத்த வேண்டும்.

சாம்சங் கேலக்ஸி ரிங் மீது கிடைக்கும் இந்த ரூ.10,000 தள்ளுபடியானது மற்ற இ-காமார்ஸ் தளங்களின் வழியாக கிடைக்குமா என்பது குறித்து தகவல் இல்லை. சாம்சங் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் ரிங் மூன்று ஃபினிஷ்களில் - அதாவது இது டைட்டானியம் பிளாக் (Titanium Black), டைட்டானியம் சில்வர் (Titanium Silver) மற்றும் டைட்டானியம் கோல்டு (Titanium Gold) ஆகிய 3 கலர்களில்) 9 வெவ்வேறு அளவுகளில் வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி ரிங் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? சாம்சங்கின் இந்த ஸ்மார்ட் ரிங் ஆனது சாம்சங்கின் சுற்றுச்சூழல் அமைப்பில் (Samsung ecosystem) ஒரு புதிய இணைப்பாகும். சுவாரசியமாக இது எந்த விதமான கூடுதல் சந்தா திட்டமும் இல்லாமல் ஏஐ-பவர்டு அம்சங்களை (AI-Powered Features) கொண்ட கேலக்ஸி ஏஐ (Galaxy AI) மூலம் இயக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ரிங்கில் உள்ள உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அம்சங்களை பொறுத்தவரை, ஸ்லீப் ஸ்கோர் (Sleep Score), ஸ்நோரிங் டேட்டா (Snoring Data) மற்றும் ஸ்லீப் மூவ்மெண்ட், லேடன்சி, ஹார்ட் ரேட் (Heart Rate) மற்றும் ரெசிபிரேட்டரி ரேட் போன்ற பிற அளவீடுகள் உடனான விரிவான ஸ்லீப் அனாலிஸிஸை (Sleep Analysi) வழங்குகிறது.
ஏஐ-பவர்டு அம்சங்களை பற்றி பேசுகையில், சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது செல்பீ, டெய்லி ஆக்டிவிட்டி, ஸ்லீப்பிங் ஹார்ட் ரேட் மற்றும் பலவற்றின் அடிப்படையில் உடல் மற்றும் மனநல நிலைமைகளை கண்காணிக்கும் ஆஎனர்ஜி ஸ்கோரை கொண்டு உள்ளது. ஹார்ட் ரேட் அலெர்ட் உடன் ரியல்டைம் ஹார்ட் ரேட் கண்காணிப்பை நிகழ்த்தும் அம்சமும் இதில் அடங்கும்.
சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது சாம்சங் ஹெல்த் ஆப்பின் (Samsung Health App) வழியாக ஒழுங்கற்ற ஹார்ட் ரேட் ரிதம் பற்றி பயனர்களுக்கு தெரிவிக்கிறது. மேலும் ஆட்டோ வொர்கவுட் டிடெக்ஷன், இன்ஆக்டிவ் அலெர்ட்ஸ் மற்றும் பிற உடற்பயிற்சி தொடர்பான அலெர்ட்களையும் இது ஆதரிக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ரிங் அந்த நீங்கள் தேர்வு செய்யும் அளவைப் பொறுத்து 2.3 முதல் 3.0 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். டைட்டானியம் கிரேடு 5 மூலம் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கேலக்ஸி ரிங் ஆனது 10 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட்டையும் கொண்டுள்ளது. இது அதிக வெப்பநிலை, கடினமான சூழ்நிலைகள் மற்றும் பலவற்றை தங்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது 7 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்குவதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் கேலக்ஸி ரிங் ஆனது ஃபைண்ட் மை ரிங் அம்சத்துடன் இணக்கமாக உள்ளது. இந்த அம்சத்தின் கீழ் பயனர்கள் தங்களுடைய சாம்சங் ஸ்மார்ட் ரிங் ஆனது எங்கே இருக்கிறது என்பதை எளிமையாக கண்டறிய முடியும்.


Click it and Unblock the Notifications








