Home
Gadgets

சைனீஸ் வாட்ச்களுக்கு வெடி.. ஆளுக்கு 2 ஆர்டர் போடும் விலை.. AI ஆதரவுடன் LAVA-வின் முதல் ஸ்மார்ட் வாட்ச்!

இந்திய நிறுவனமான லாவா (Lava), பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சந்தையில்.. குறிப்பாக ரூ.10,000 - ரூ.20,000 க்குள் என்கிற விலை வரம்பில்.. சக்கைபோடு போட்டு வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ள விலைப்பிரிவில், லாவா நிறுவனம் 187% வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

லாவா நிறுவனத்தின் இந்த அபார வளர்ச்சிக்கு, மலிவு விலையிலான அதன் 5ஜி ஸ்மார்ட்போன்களும் (அக்னி 2 5ஜி, பிளேஸ் 2 5ஜி, பிளேஸ் ப்ரோ 5ஜி, ஸ்ட்ராம் 5ஜி) முக்கிய காரணமாகும். லாவாவின் 5ஜி போன்கள் ஆனது ரெட்மி (Redmi), ஷாவ்மீ (Xiaomi), விவோ (Vivo), ஒப்போ (Oppo), ரியல்மி (Realme) போன்ற சீன நிறுவனங்களின் 5ஜி மாடல்களை ஓரங்கட்ட முயற்சிக்கின்றன.

AI ஆதரவுடன் LAVA-வின் முதல் ஸ்மார்ட் வாட்ச்!

விரைவில் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G) என்கிற புதிய ஸ்மார்ட்போன், வருகிற மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் (பிளேஸ் 2 5ஜி போலவே) பட்ஜெட்-விலைப்பிரிவின் கீழ் வருமென்று கூறப்படுகிறது.

இப்படியாக சைனீஸ் ஸ்மார்ட்போன்களை துவம்சம் செய்வது போதாதென்று, சீன நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச்களுக்கும் (Chinese Smart Watches) வேட்டு வைக்கும் விதமாக, லாவா நிறுவனம் ஏஐ திறன்கள் (AI Capabilities) உடனான தனது முதல் ஸ்மார்ட் வாட்ச்சை கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

AI ஆதரவுடன் LAVA-வின் முதல் ஸ்மார்ட் வாட்ச்!

லாவாவின் முதல் ஸ்மார்ட் வாட்ச்சில் (Lava First Smart Watch) என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? லாவாவின் முதல் ஸ்மார்ட் வாட்ச்சில் ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் (Artificial Intelligence Technology) தொடர்பான திறன்கள் அல்லது அம்சங்கள் இடம்பெறும். இதுதவிர்த்து லாவாவின் முதல் ஸ்மார்ட் வாட்ச் குறித்து எந்த தகவலும் இல்லை!

என்ன விலைக்கு வரும்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷர்மாவின் (Tipster Mukul Sharma) கூற்றுப்படி, லாவா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை சுமார் ரூ.4,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் இருக்கும். இந்த விலை நிர்ணயம் சீன நிறுவங்களின் ஸ்மார்ட் வாட்ச்களை மட்டுமின்றி நாய்ஸ் (Noise), போட் (boAt) மற்றும் ஃபையர்-போல்ட் (Fire-Boltt) போன்ற இந்திய பிராண்டுகளையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

AI ஆதரவுடன் LAVA-வின் முதல் ஸ்மார்ட் வாட்ச்!

லாவா பிளேஸ் கர்வ் 5ஜி-ன் அம்சங்கள் மற்றும் விலை? இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே (Curved AMOLED Display) மற்றும் 64 மெகாபிக்சல் மெயின் சோனி சென்சார் உடன் வரும் என்று கூறப்படுகிறது. விலையை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி, பெரும்பாலும் இது பிளேஸ் 2 5ஜி மாடலை போலவே ரூ.10,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டிருப்பதால், இதன் விலை நிர்ணயம் மிட்-ரேன்ஜ் பிரிவிலும் வைக்கப்படலாம்.

லாவா பிளேஸ் 2 5ஜி-யின் விலை என்ன? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இது கிளாஸ் பிளாக், கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் லாவெண்டர் கலர் ஆப்ஷன்களில் லாவா இ-ஸ்டோர் மற்றும் அமேசான் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

AI ஆதரவுடன் LAVA-வின் முதல் ஸ்மார்ட் வாட்ச்!

லாவா பிளேஸ் 2 5ஜி-யின் முக்கிய அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட், டூயல் ரியர் கேமரா செட்டப், 50எம்பி மெயின் கேமரா, ஸ்கிரீன் ஃபிளாஷ் ஆதரவுடன் 8எம்பி செல்பீ கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000எம்ஏஎச் பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
First Smartwatch with AI Features Under Rs 4000 Indian Company Lava Entering New Market Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X