iQOO-வின் முதல் Watch.. அடேங்கப்பா விலையில் 100 ஸ்போர்ட்ஸ் மோட், eSIM ஆதரவு, SpO2 மானிட்டர், 505mAh பேட்டரி!
ஐக்யூ (iQOO) நிறுவனம் அதன் நியோ 9 சீரிஸ் (Neo 9 Series) ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து தனது முதல் ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகம் செய்துள்ளது. இசிம் ஆதரவு உடன் வரும் ஐக்யூ வாட்ச்சின் மற்ற முக்கிய அம்சங்கள் என்ன? விலை என்ன? இதோ விவரங்கள்:
ஐக்யூ வாட்ச்சின் முழு அம்சங்கள்: ஐக்யூவின் இந்த முதல் ஸ்மார்ட் வாட்ச் ஆனது 466 x 466 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் ஆல்வேஸ்-ஆன் ஆதரவு உடனான 1.43-இன்ச் அமோஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ப்ளூடூத் காலிங் ஆதரவைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச், அணிந்தபடியே நேரடியாக வாய்ஸ் கால்களில் பேச உதவுகிறது.

இந்த ஸ்மார்ட் வாட்ச் விவோ நிறுவனத்தால் சொந்தமாக உருவாக்கப்பட்ட ப்ளூஓஎஸ் (BlueOS) ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின்கீழ் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஸ்கிப்பிங் போன்ற 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களும் உள்ளன. இவைகளை கனெக்ட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு (Android) அல்லது ஐஓஎஸ் (iOS) ஸ்மார்ட்போன் வழியாக கஸ்டமைஸ் செய்யலாம்.
சென்சார்களை பொறுத்தவரை, இது எஸ்பிஓ2 மானிட்டர், ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார். அக்சலரேஷன் சென்சார், கைரோஸ்கோப், ப்ரெஷர் ஆல்டிடூயுட் சென்சார், ஜியோமேக்னட்டிக் சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார் மற்றும் ஹால் சென்சார் போன்றவைகளை கொண்டுள்ளது.

ஸ்லீப் மானிட்டர், ஸ்ட்ரெஸ் மானிட்டர், ப்ரீதிங் ட்ரெயினிங் மற்றும் மென்ஸ்சூரல் சைக்கிள் ரெகார்ட்டிங் போன்ற தினசரி சுகாதார செயல்பாடுகளை செய்ய உதவும் ஐக்யூ வாட்ச்சில் ஏஐ அடிப்படையிலான கோச்சும் (AI Coach) உள்ளது. இந்த வாட்ச்சில் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி உள்ளது. டச்லெஸ் பேமெண்ட்டுகளை செய்வதற்கான என்எப்சி (NFC) ஆதரவும் உள்ளது.
இது வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 505mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஐக்யூவின் கூற்றுப்படி இதை ஒரு முறை சார்ஜில் (சாதாரண பயன்பாட்டில்) மூன்று நாட்கள் வரையிலான ரன் டைமை (Runtime) வழங்கும்; ஸ்டேண்ட்பை டைம்-ஐ பொறுத்தவரை 7 நாட்கள் வரை நீடிக்கும். அளவீட்டில் இது 46.1 மிமீ மற்றும் எடையில் 36 கிராமையும் கொண்டுள்ளது.

ஐக்யூ வாட்ச்சின் விலை நிர்ணயம்: ரப்பர் ஸ்ட்ராப் கொண்ட ஐக்யூ வாட்ச்சின் ப்ளூடூத் வேரியண்ட் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.13,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரப்பர் ஸ்ட்ராப் கொண்ட இசிம் வேரியண்ட் தோராயமாக ரூ.14,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக லெதர் ஸ்ட்ராப் கொண்ட இசிம் வேரியண்ட் தோராயமாக ரூ.15,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் விவோ இணையத்தில் ஹாயு பிளாக் (Haoyu Black) மற்றும் ஸ்டார் ட்ராக் பிளாக் (Star Track Black) கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ள ஐக்யூ வாட்ச் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும், இங்கே இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்கிற விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஐக்யூ நியோ 9 சீரிஸ் விலை நிர்ணயம்: ஐக்யூ 9 நியோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.26,900 க்கு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி, 16ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன்கள் முறையே ரூ.29,300 க்கும், ரூ.32,800 க்கும் மற்றும் ரூ.37,400 க்கும் அறிமுகமாகி உள்ளது.
மறுகையில் உள்ள ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனும் மொத்தம் 4 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ப்பனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி, 16ஜிபி ரேம் + 256ஜிபி, 16ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன்கள் முறையே ரூ.35,100 க்கும், ரூ.38,600 க்கும், ரூ.42,100 க்கும் மற்றும் ரூ.46,800 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








