OnePlus பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் "இதை" ஒருத்தனும் கண்டுக்க மாட்டான்!

|

அவன் அவன் கொஞ்சம் நஷ்டம் வந்தாலும் பரவாயில்ல.. முதன் முதலில் அறிமுகம் செய்யும் ஒரு தயாரிப்பை, கொஞ்சம் மலிவான விலைக்கு விற்பனை செய்வோம்..

அப்போ தான் மக்கள் மத்தியில் நல்ல 'ரீச்' கிடைக்கும்னு புத்திசாலித்தனமாக யோசித்து.. அதுக்கு ஏற்றது போல தீயா வேலை செய்யுறான்!

ஆனால் நம்ம OnePlus அண்ணே இருக்காரே!?

ஆனால் நம்ம OnePlus அண்ணே இருக்காரே!?

நாங்க ஏற்கனவே பெரிய பிராண்ட்டுப்பா என்கிற எண்ணத்தில்.. நம்ம OnePlus அண்ணே இருக்காருல.. அவரு "ஒரு வேலையை" பார்த்தாரு! அது வொர்க் அவுட் ஆகல! இப்போ மறுபடியும் "ஒரு வேலையை" பார்த்து இருக்காப்ல.. அதுவாச்சும் சரிப்பட்டு வருமா?

OnePlus நிறுவனம் அப்படி என்ன வேலையை செய்துள்ளது? இது என்ன மேட்டர்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!

OnePlus - முதலில் பார்த்த வேலையும், மறுபடியும் பார்த்த வேலையும்!

OnePlus - முதலில் பார்த்த வேலையும், மறுபடியும் பார்த்த வேலையும்!

நாம் இங்கே முழுக்க முழுக்க பேசுவது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச்-ஐ பற்றி தான்!

முதலில் பார்த்த வேலை என்னவென்றால் - இந்தியாவில் ரூ.10,000 க்கு மேலான விலை நிர்ணயம் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே வாங்க கிடைக்கும் நேரத்தில், ரூ.14,999 என்கிற விலையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் வாட்ச் அறிமுகம் செய்தது தான்!

இரண்டாவது வேலை?

இரண்டாவது வேலை?

இரண்டாவது வேலை என்னவென்றால், ரெட்மி, ரியல்மி நிறுவனங்களை போல பட்ஜெட் விலை ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்யாமல், எடுத்ததும் ரூ.15,000 க்கு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது தவறு என்பதை புரிந்துகொண்ட ஒன்பிளஸ் நிறுவனம் அதன் OnePlus Watch மீது திடீர் விலைக்குறைப்பை அறிவித்து உள்ளது தான்!

வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!

ஆனால் ஒரு புண்ணியமும் இல்லை!

ஆனால் ஒரு புண்ணியமும் இல்லை!

ஏனெனில், திடீர் விலைக்குறைப்பு என்றதும் "ஆஹா.. ஓஹோ!" என்று எதையும் எதிர்பார்த்து விட வேண்டாம். OnePlus Watch மீது ரூ.1000 என்கிற விலைக்குறைப்பே அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரே ஒரு கலர் ஆப்ஷன் மீது மட்டுமே!

"இதுக்கு.. ஒன்னும் பண்ணாம இருந்து இருக்கலாமே!" என்கிற மைண்ட் வாய்ஸ் எழுகிறது அல்லவா?

அட ஆமாங்க! இந்தியாவில் ரூ.14,999 க்கு அறிமுகமான ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச் ஆனது தற்போது ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது!

எதிர்பார்ப்பும்.. பல்பும்!

எதிர்பார்ப்பும்.. பல்பும்!

அறிமுகமாகும் முன்னர், ஒன்பிளஸ் வாட்ச் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தயாரிப்பாக இருந்தது, ஆனால் அறிமுகமான வேகத்தில் -பெரிய அளவிலான எதிர்வினைகளை சந்தித்தது!

ஏனெனில் OnePlus Watch-இன் டராக்கிங் துல்லியமானது மிகவும் மோசமாக இருந்தது. மேலும் அதில் iOS-க்கான ஆதரவும் இல்லை; ஒரே ஒரு Size-இல் மட்டுமே வந்தது மற்றும் "வரையறுக்கப்பட்ட" ஸ்மார்ட் அம்சங்களை மட்டுமே பேக் செய்தது.

வெறும் ரூ.999 & ரூ.844-க்கு இப்படியும் கூட Smart Watch கிடைக்குமா? நம்பவே முடியல!வெறும் ரூ.999 & ரூ.844-க்கு இப்படியும் கூட Smart Watch கிடைக்குமா? நம்பவே முடியல!

நல்ல விஷயங்கள் என்று ஒன்றுமே இல்லையா?

நல்ல விஷயங்கள் என்று ஒன்றுமே இல்லையா?

இருக்கிறது! முக்கியமான விடயங்களில் பலவீனமாக இருந்தாலும் கூட, ஒன்பிளஸ் வாட்ச் ஆனது நல்ல AMOLED டிஸ்பிளே, SpO2 கண்காணிப்பிற்கான ஆதரவு, IP68 மதிப்பீடு மற்றும் நல்ல பாஸ்ட் சார்ஜிங், நல்ல பேட்டரி லைஃப்-ஐ வழங்குகிறது.

இருந்தாலும் கூட, இது விலைக்கு ஏற்ற அம்சங்களை வழங்குகிறதா? ரூ.15,000 க்கு வொர்த் ஆன ஸ்மார்ட் வாட்ச்சா என்று கேட்டால்.. இல்லை என்பதே எங்கள் பதில்!

OnePlus Watch-இன் முக்கிய அம்சங்கள்:

OnePlus Watch-இன் முக்கிய அம்சங்கள்:

- 1.39 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
- கீறலை எதிர்க்க ஸ்க்ரீனில் சபையர் கிளாஸ் கோட்டிங்
- 110 ஒர்க்அவுட் மோட்ஸ்
- இன்பில்ட் ஜிபிஎஸ்

- ஸ்லீப், ஸ்ட்ரெஸ், ப்ளட் ஆக்ஸிஜன் அளவு மற்றும் ஹார்ட் ரேட் போன்ற கண்காணிப்புகள்
- இதை OnePlus TV உடன் இணைக்க முடியும்; ரிமோட்டாக பயன்படுத்த முடியும்
- மேலும் நீங்கள் தூங்கிவிட்டால் இந்த வாட்ச் தானாகவே டிவியை ஆஃப் செய்யும்
- IP68 மதிப்பீட்டுடன் வருகிறது, இது தண்ணீரை "எதிர்க்கும்" திறன் கொண்டது.

- 402mAh பேட்டரியால் சக்தியூட்டப்படுகிறது.
- ஒரு முறை 100% சார்ஜ் செய்தால் 2 வாரங்கள் வரை பேட்டரி லைஃப்-ஐ வழங்கும்

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

ஒருவேளை இந்த ஸ்மார்ட் வாட்சை நீங்கள் வாங்க விரும்பினால்..?

ஒருவேளை இந்த ஸ்மார்ட் வாட்சை நீங்கள் வாங்க விரும்பினால்..?

ஒன்பிளஸ் வாட்ச் ஆனது 2 கலர் ஆப்ஷன்களில் (மிட்நைட் பிளாக் மற்றும் மூன்லைட் சில்வர்) வாங்க கிடைக்கிறது. ஆனால் மூன்லைட் சில்வர் கலர் ஆப்ஷன் மட்டுமே ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதை நீங்கள் ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஒன்பிளஸின் பிரத்யேக ஆன்லைன் பார்ட்னரான அமேசான் வழியாக வாங்கலாம்!

Photo Courtesy: OnePlus

Most Read Articles
Best Mobiles in India

English summary
அவன் அவன் கொஞ்சம் நஷ்டம் வந்தாலும் பரவாயில்ல.. முதன் முதலில் அறிமுகம் செய்யும் ஒரு தயாரிப்பை, கொஞ்சம் மலிவான விலைக்கு விற்பனை செய்வோம்.. அப்போ தான் மக்கள் மத்தியில் நல்ல 'ரீச்' கிடைக்கும்னு புத்திசாலித்தனமாக யோசித்து.. அதுக்கு ஏற்றது போல தீயா வேலை செய்யுறான்! ஆனால் நம்ம OnePlus அண்ணே இருக்காருல.. அவரு அப்படி இல்ல!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X