Home
Gadgets

இதோட ஸ்மார்ட் வாட்ச் கதை முடிஞ்சது.. ஸ்க்ரீன் இல்லாத Google பேண்ட்.. மொத்த இந்தியாவும் வாங்கும் கம்மி விலை!

கூகுள் (Google) நிறுவனமானது இந்தியாவில் வாங்க கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்வாட்ச்களின் கதைகளை முடிக்க திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. கூகுளின் புதிய 'ஃபிட்பிட் ஏர் (Google Fitbit Air) மாடல் ஆனது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது

கூகுளின் கீழ் ஃபிட்பிட் அறிமுகப்படுத்தும் முதல் ஸ்க்ரீன்லெஸ் ஃபிட்னஸ் பேண்ட் (First screenless fitness band) இதுவாகும். நீண்ட காலமாக ஸ்க்ரீன் உடன் கூடிய டிவைஸ்களை மட்டுமே வழங்கி வந்த ஃபிட்பிட்-ன் வழக்கமான பாணியிலிருந்து இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது.

இதோட ஸ்மார்ட் வாட்ச் கதை முடிஞ்சது.. ஸ்க்ரீன் இல்லாத Google பேண்ட்!

ஃபிட்னஸ் சார்ந்த டிவைஸ்களுக்கு பெயர் பெற்ற ஃபிட்பிட் ஆனது, கவனச்சிதறல் இல்லாத உடற்பயிற்சிகளை மேற்கொள்ள விரும்பும் பயனர்களுக்காகவே இந்த புதிய ஏர் மாடலை வடிவமைத்துள்ளது. ஃபிட்பிட் ஏர் ஆனது இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் (BIS) சான்றிதழ் தரவுத்தளத்தில் இடம்பெற்றுள்ளது - இது உடனடி இந்திய அறிமுகத்தை குறிக்கிறது.

ஃபிட்பிட் ஏர் பிட்னஸ் பேண்ட் அம்சங்கள்: ஃபிட்பிட் ஏர் மாடல் ஆனது கடந்த மாதமே அமெரிக்காவில் அறிமுகமாகி விட்டது என்பதால், இதன் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. நோட்டிபிகேஷன், உடற்பயிற்சி சார்ந்த புள்ளிவிவரங்கள் மற்றும் ஹெல்த் கண்காணிப்பு மற்றும் அதன் அளவீடுகளுக்காக ஸ்க்ரீன்ளை சார்ந்திருக்கும் பாரம்பரிய ஃபிட்னஸ் பேண்டுகளை போலல்லாமல், ஃபிட்பிட் ஏர் ஆனது ஒரு எளிமையான அணுகுமுறையை கையாள்கிறது.

இந்த டிவைஸ் - டிஸ்பிளே மற்றும் பிஸிக்கல் பட்டன்கள் இரண்டையும் தவிர்த்து, அதற்கு பதிலாக அலெர்ட்களுக்காக நுட்பமான சப்டில் ஹெப்டிக் ஃபீட்பேக்கை (subtle haptic feedback) பயன்படுத்துகிறது. பயனர்கள் கூகுள் ஹெல்த் ஆப் மூலம் கெல்த் சார்ந்த நுண்ணறிவுகள், செயல்பாட்டு தரவுகள் மற்றும் பயிற்சி அம்சங்களை அணுகலாம். இது இந்த டிராக்கரை மிகவும் செயலற்ற மற்றும் கவனச்சிதறல் இல்லாத வியரபிள் டிவைஸ் ஆக நிலைநிறுத்துகிறது.

ஃபிட்பிட் ஏர் ஆனது 24/7 இதய துடிப்பு கண்காணிப்பு, ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Afib) எச்சரிக்கைகளுடன் கூடிய இதய தாளக் கண்காணிப்பு, இரத்த ஆக்ஸிஜன் (SpO2) கண்காணிப்பு, ஓய்வு நேர இதயத் துடிப்பு அளவீடு மற்றும் இதயத் துடிப்பு மாறுபாடு கண்காணிப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறது.

தூக்கக் கண்காணிப்பு அம்சங்களில் தூக்க நிலை பகுப்பாய்வு மற்றும் கால அளவு கண்காணிப்பு ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் ஆக்டிவிட்டி கண்காணிப்பில் தானியங்கி உடற்பயிற்சி கண்டறிதல், கைமுறை உடற்பயிற்சி பதிவு மற்றும் கூகுள் ஹெல்த் கோச் மூலம் வழிகாட்டப்பட்ட ஃபிட்னஸ் அமர்வுகள் ஆகியவை அடங்கும்.

இந்த டிவைஸ் வெறும் 12 கிராம் எடை கொண்டது என்றும், ஃபிட்பிட் லக்ஸை விட சுமார் 25 சதவீதம் சிறியது என்றும் கூகுள் கூறுகிறது. இது நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் உள்ள மிகவும் இலகுவான பேண்ட் ஆக உள்ளது.. இந்த இலகுவான வடிவமைப்பு, உடற்பயிற்சியின் போதும் மற்றும் இரவு நேர உறக்கத்தை கண்காணிக்கும் போதும் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஒரே சார்ஜில் பேட்டரி லைஃப் - ஏழு நாட்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஃபாஸ்ட்-சார்ஜிங் வசதி, சுமார் ஐந்து நிமிடங்களில் ஒரு நாள் முழுவதுமான பயன்பாட்டிற்கு தேவையான சக்தியை வழங்க முடியும். இந்த டிராக்கர் பாலிகார்பனேட் கட்டமைப்பு, 50 மீட்டர் ஆழம் வரையிலான நீர் எதிர்ப்பு திறன் மற்றும் ஒரு சிறிய ஸ்டேட்டஸ் இண்டிகேட்டர் லைட் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

விலை: இந்த ஃபிட்னஸ் டிராக்கர், காற்றோட்டமான பெர்ஃபார்மன்ஸ் லூப், வியர்வையை தாங்கும் ஆக்டிவ் பேண்ட் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட எலிவேட்டட் மாடர்ன் பேண்ட் ஆகிய வகைகளில் வருகிறது. அமெரிக்காவில், ஃபிட்பிட் ஏர் மாடலின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.9,500 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டீபன் கர்ரி எடிஷனின் விலை தோராயமாக ரூ.12,300 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
First screenless fitness band Google Fitbit Air All St to Launching in India Soon Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X