Home
Gadgets

தட்டி விட்றா ஒரு ஆர்டர்-ஐ... அறிமுக விலையை விட கம்மியான ஆஃபர் விலையில் OnePlus Pad Go வாங்குவது எப்படி?

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) டேப்லெட், அக்டோபர் 20 முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்த டேப்லெட்டின் அறிமுக விலை என்ன? ஆஃபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டின் அறிமுகம் விலை: 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் வைஃபை மாடலின் இந்திய விலை ரூ.19,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வரும் எல்டிஇ மாடலின் விலை ரூ.21,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆஃபர் விலையில் OnePlus Pad Go வாங்குவது எப்படி?

கடைசியாக உள்ள 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் எல்டிஇ மாடலின் விலை ரூ.23,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரண்டாவது ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆனது அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart), ஒன்பிளஸ் ஸ்டோர்ஸ் (OnePlus Stores), ரிலையன்ஸ் (Reliance), க்ரோமா (Croma) மற்றும் பிற தளங்களின் வழியாக வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் மீது கிடைக்கும் விற்பனை சலுகைகள்: ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் (OnePlus Experience Stores), ஒன்பிளஸ்.இன் (OnePlus.in) மற்றும் வேறு சில ஆஃப்லைன் ஸ்டோர்கள் வழியாக, ஐசிஐசிஐ (ICICI) வங்கி மற்றும் ஒன்கார்ட் (OneCard) கார்டுகளை பயன்படுத்தி ஒன்பிளஸ் பேட் கோவை வாங்கினால் ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும். இதன்கீழ் ஒன்பிளஸின் டேப்லட்டை ரூ.17,999 க்கு சொந்தமாக்க முடியும்.

இதேபோல ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் இணையதளம் வழியாக ஒன்பிளஸ் பேட் கோவை ஆர்டர் செய்தால், வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.1,000 சிறப்பு விலை கூப்பன் தள்ளுபடியை பெறலாம். இந்த சலுகையானது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வைஃபை மாடல் மீது மட்டுமே கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் (Amazon) வழியாக ஒன்பிளஸ் பேட் கோவை வாங்கும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கார்டுகளை பயன்படுத்தி ரூ.2,000 வரையிலான உடனடி வங்கி தள்ளுபடியை பெறலாம். பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் கூட போன்ற சலுகை உள்ளது, ஆனால் அங்கே நீங்கள் ஐசிஐசிஐ பேங்க் காரட்டை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள்: ஒன்பிளஸின் இந்த புதிய டேப்லெட் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையிலான ஆக்ஸிஜென்ஓஎஸ் 13.2 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) கொண்டு இயங்குகிறது. இது ஸ்டாண்டர்ட் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 11.35-இன்ச் 2.4கே (2408 x 1720 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி சிப்செட் (MediaTek Helio G99 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) உடனான 8 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரி பேக்கப்பை பொறுத்தவரை, ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டில் 33W சூப்பர்வூக் (SUPERVOOC) சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 8000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த டேப்லெட் 514 மணிநேர ஸ்டேண்ட்பை டைம்-ஐ வழங்கும்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் பேட் கோவில் மேம்பட்ட ஆடியோவிற்கான ஆம்னிபியரிங் சவுண்ட் ஃபீல்ட் (Omnibearing Sound Field) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. மேலும் வைஃபை 5 (802.11ac), 802.11a/b/g/n/, ப்ளூடூத் 5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட், ஜியோமேக்னடிக் சென்சார், லைட் சென்சார், கைரோஸ்கோப், ஃபேஸ் அன்லாக் போன்றவைகளும் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
First Sale of Oneplus Pad Go Tablet in India on October 20 Check Price Offers Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X