வாரித்தூக்கும் ஆஃபர்.. AMOLED டிஸ்பிளே.. பிரீமியம் மெட்டாலிக் டிசைன்.. ப்ளூடூத் காலிங்.. எந்த மாடல்?
பிரீமியம் மெட்டாலிக் டிசைனில் ப்ளூடூத் காலிங், அமோலெட் டிஸ்பிளே, வாய்ஸ் அசிஸ்டன்ட், ஹெல்த் மானிட்டர்கள் போன்ற பக்கவான அம்சங்களுடன் ஃபயர் போல்ட் (Fire Boltt) நிறுவனத்தின் ஃபயர் போல்ட் விஷனரி அல்ட்ரா (Fire-Boltt Visionary Ultra) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
நம்மில் பலருக்கு மெட்டல் ஸ்ட்ராப் கொண்ட வாட்ச்சை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், இப்போது ஸ்மார்ட்வாட்ச்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், மெட்டல் ஸ்ட்ராப் வாட்ச்களை பெரும்பாலும் பார்க்க முடிவதில்லை. இருப்பினும், அதற்கான முக்கியத்துவத்தை அறிந்த ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனங்கள், மெட்டல் ஸ்ட்ராப் கொண்ட ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டன.

ஃபயர் போல்ட் விஷனரி அல்ட்ரா அம்சங்கள் (Fire Boltt Visionary Ultra Specifications): இந்த ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் 1.78 இன்ச் (368 x 448 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always On Display) கொண்ட மாடலாகும். இந்த வாட்ச்சில் மல்டிபிள் வாட்ச் பேஸ்கள் (Multiple Watch Faces) வருகின்றன.
இந்த ஃபயர் போல்ட் வாட்ச் பிரீமியம் லூக்கில் மெட்டல் ஸ்ட்ராப் (Metal Strap) கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் ரோட்டேட்டிங் கிரவுண் (Rotating Crown) மற்றும் பட்டன் (Button) கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் வருகிறது. அதற்காக இன்பில்ட் மைக் (Mic) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு கால் ஹிஸ்டரி (Call History), குயில் டயல் பேர் (Quick Dial Pad) மற்றும் சிங்க் காண்டாக்ட்ஸ் (Sync Contacts) அம்சங்கள் வருகின்றன. இந்த ஃபயர் போல்ட் மாடலில் 110 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) இருக்கின்றன. இதில் ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங், சைக்கிளிங், வாக்கிங் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிகள் அடங்கும்.
வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் உள்ளது. இந்த ஃபயர் போல்ட் விஷனரி அல்ட்ரா வாட்ச்சில் மொத்தமாக 5 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor) எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஹார்ட்ரேட் டிராக்கிங் மானிட்டர் (Heart Rate Tracking Monitor) வுமன் ஹெல்த் மானிட்டர் (Women Health Monitor) மற்றும் ப்ரீத் டிரெய்னிங் மானிட்டர் (Breathe Training Monitor) ஆகியவை வருகின்றன.
IP68 தர வாட்டம் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water And Dust Resistant) இருக்கிறது. டிடபுள்யூஎஸ் கனெக்ஷன் சப்போர்ட் (TWS Connection Support) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ப்ளாஷ் லைட் (Flashlight), ஸ்மார்ட் நோட்டிஃபிக்கேஷன் (Smart Notifications), வெதர் அப்டேட் (Weather Update) கேமரா கன்ட்ரோல் மற்றும் மியூசிக் கன்ட்ரோல் வருகின்றன.
அதேபோல டைமர் (Timer), அலாரம் (Alarm), ஸ்டாப்வாட்ட் (Stopwatch), ஸ்டென்டரி ரிமைன்டர் (Sedentary Reminder) மற்றும் டிரிங்கிங் வாட்டர் ரிமைன்டர் (Drinking Water Reminder) போன்ற பல்வேறு அம்சங்களும் இருக்கின்றன. இந்த ஃபயர் போல்ட் விஷனரி அல்ட்ரா வாட்ச் நார்மல் மோடில் (Normal Mode) தொடர்ந்து 5 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். அதேபோல ஸ்டாண்ட்பை மோடில் (Standby Mode) தொடர்ந்து 25 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்.
இந்த வாட்ச் கோல்டு (Gold), பிளாக் (Black) மற்றும் சில்வர் (Silver) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த வாட்ச் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த வாட்ச்சின் விலை ரூ.10 ஆயிரத்துக்கு மேல் நிர்ண்யிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது, அறிமுக சலுகையாக ரூ.3,499க்கு விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








