Home
Gadgets

Fire-Boltt அறிமுகம் செய்த பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்.! ஆனால் விலை கம்மி தான்.!

ஃபயர் போல்ட் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிறப்பான அம்சங்களுடன் இந்த ஃபயர் போல்ட் ஸ்மார்ட் வாட்ச் மாடல்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஃபயர் போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பிரீமியம் ப்ளூடூத் காலிங் வசதியைக் கொண்டு இந்த அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Fire-Boltt அறிமுகம் செய்த பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்.! ஆனால் விலை கம்மி!

அதாவது டேகர் லூக்ஸ் மாடலை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச். இது ஒரு பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் ஆகும். பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவம் கொண்ட டயல், லெதர், மெட்டாலிக் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஃபயர் போல்ட் நிறுவனம்.

1.39-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 240x240 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

Fire-Boltt அறிமுகம் செய்த பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்.! ஆனால் விலை கம்மி!

குறிப்பாக இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் மாடல். மேலும் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் சப்போர்ட் கொண்டு இந்த ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட், இதய துடிப்பு மானிட்டர் செய்யும் வசதி, SpO2 டிராக்கிங், ஸ்லீப் மானிட்டரிங் மற்றும் மகளிர் உடல் ஆரோக்கியத்தை டிராக் செய்யும் வசதி எனப் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விட தனித்துவமான வடிவமைப்புடன் இந்த ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த புதிய அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ப்ளூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட், சின்க் கான்டாக்ட் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம்.

இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச். பின்பு புஷ் பட்டன், சுழலும் கிரவுன மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல். அதேபோல் இதில் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Fire-Boltt அறிமுகம் செய்த பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்.! ஆனால் விலை கம்மி!

குறிப்பாக வானிலை அப்டேட், இன்பில்ட் கேம்ஸ், மியூசிக், கேமரா கன்ட்ரோல் ஆதரவுகள் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இடம்பெற்றுள்ளன. பின்பு 270 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது இந்த ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச். பின்பு இந்த அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் லெதர் ஸ்டிராப் வேரியண்ட் பிளாக் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதன் மெட்டாலிக் ஸ்டிராப் வேரியண்ட் பிளாக், சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.

குறிப்பாக லெதர் ஸ்டிராப் மாடல் விலை ரூ. 1799-ஆக உள்ளது. பின்பு இதன் மெட்டாலிக் ஸ்டிராப் விலை ரூ. 1999-ஆக உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Fire-Boltt Ultimate smartwatch with 1.39-inch display launched in India at low price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X