மிரளவிடும் பட்ஜெட்.. கிளாசிக் ரக்கட் டிசைன்.. ப்ளூடூத் காலிங்.. அமோலெட் டிஸ்பிளே.. எந்த வாட்ச்?
கிளாசிக் ரக்கட் டிசைனில் ஜிங்க் அலாய் பாடி, ப்ளூடூத் காலிங், அமோலெட் டிஸ்பிளே, IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட், 25 நாட்கள் பேட்டரி பேக்கப் போன்ற மிரளவிடும் அம்சங்களை கொண்ட ஃபயர் போல்ட் ஸ்ட்ரைக் (Fire Boltt Strike) ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் கம்மி விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

ஃபயர் போல்ட் ஸ்ட்ரைக் அம்சங்கள் (Fire Boltt Strike Specifications): இந்த ஸ்ட்ரைக் ஸ்மார்ட்வாட்ச் கிளாசிக் ரக்கட் டிசைனில் (Rugged Design) ஸ்குவார் டயல் (Square Dial) கொண்டிருக்கிறது. ஜிங்க் அலாய் மிடில் ஃபிரேம் (Zinc Alloy Middle Frame) வருகிறது. அதோடு ஃபங்ஷன் பட்டன் மற்றும் ரோடேட்டிங் கிரவுன் (Rotating Crown) கொண்டுள்ளது.
ஆகவே, பக்கா பிரீமியம் டிசைனை எதிர்பார்க்க முடிகிறது. இந்த ஃபயர் போல்ட் ஸ்ட்ரைக் வாட்ச்சில் 1.95 இன்ச் (410 x 502 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always-on Display) மாடலாகும். இது டிஸ்பிளே இன்டோர் மட்டுமல்லாமல், அவுட்டோரிலும் கிரிஸ்டல் கிளியர் கிளாரிட்டியை கொடுக்கிறது.
இந்த மாடலில் மல்டிபிள் வாட்ச் பேஸ்கள் (Multiple Watch Faces) மற்றும் 123 ஸ்போர்ட் மோட்கள் (Sports Modes) வருகின்றன. இதில் ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங், சைக்கிளிங் உள்ளிட்ட முக்கிய மோட்களும் இருக்கின்றன. இந்த ஃபயர் போல்ட் வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட வருகிறது. அதோடு கால் ஹிஸ்டரி (Call History), குயிக் டயல் பேட் (Quick Dial Pad) வருகிறது.

அதுமட்டுமல்லாமல், கால் ரெக்கார்டிங் (Call Recording), சிங்க் கான்டாக்ட்ஸ் (Sync Contacts) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளூடூத் காலிங் பீச்சருக்காவே இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் (Inbuilt Mic and Speaker) வருகிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் வருகிறது. IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust and Water Resistant) கொண்டிருக்கிறது.
இந்த ஸ்ட்ரைக் ஸ்மார்ட்வாட்ச்சில் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் (Fire-Boltt Health Suite) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Health Rate Monitor), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), எஸ்பிஓ2 மானிட்டரிங் (SpO2 Monitor) மற்றும் வுமன் ஹெல்த் டிராக்கர் (Women Health Tracker) வருகிறது. அதோடு டிரிங்க் வாட்டர் மற்றும் செடன்டரி ரீமைண்டர் சப்போர்ட் கொண்டுள்ளது.
இந்த ஃபயர் போல்ட் ஸ்ட்ரைக் வாட்ச்சின் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்களை (Smart Notifications) பொறுத்தவரையில், வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), அலாரம் (Alarm), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) மற்றும் கேமரா கன்ட்ரோல் (Camera Control) வருகின்றன. இந்த மாடலில் பக்காவான பேட்டரி பேக்கப்பை எதிர்பார்க்கலாம்.
ஏனென்றால், ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், இந்த வாட்ச் கிளாசிக் மோடில் (Classic Mode) 8 நாட்கள் பேக்கப் கொடுக்கும். அதுவே ப்ளூடூத் காலிங் மோடில் (Bluetooth Calling Mode) 5 நாட்களும், ஸ்டான்பை மோடில் (Standby Mode) தொடர்ந்து 25 நாட்களும் பேக்கப் கொடுக்க கூடியது. இந்த வாட்ச் கேமோ பிளாக், கேமோ கிரீன், கோல்டு பிளாக் மற்றும் ஆரஞ்சு ஆகிய நான்கு கலரில் கிடைக்கிறது.

இந்த வாட்ச் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.1,799ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையானது, அறிமுக சலுகை என்பதால் விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, கம்மியான விலையில் பிரீமியம் டிசைன் மற்றும் அம்சங்களை கொண்ட வாட்ச் வேண்டுமானால், இந்த ஃபயர் போல்ட் ஸ்ட்ரைக் மாடலை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








