Home
Gadgets

இனி மொபைல் அவ்ளோதான்! பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 4G சிம் கார்டு.. செல்பீ கேமரா.. 1000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இனி ஸ்மார்ட்போன் எதுக்கு? இந்த ஸ்மார்ட்வாட்ச் போதும் போலயே! என்று சொல்லும் அளவுக்கு 4ஜி சிம் கார்டு சிலாட் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, செல்பீ கேமரா, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 1000mAh பேட்டரி, கூகுள் பிளே ஸ்டோர் மூலம் ஆப்கள் சப்போர்ட் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ஃபயர்-போல்ட் ஸ்னாப் (Fire-Boltt Snapp) ஸ்மார்ட்வாட்ச் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.

ஃபயர்-போல்ட் ஸ்னாப் அம்சங்கள் (Fire-Boltt Snapp Specifications): இந்த ஃபயர்-போல்ட் மாடலானது ஸ்குவார் டயல் டிசைனில் (Square Dial Design) 2 ஃபங்ஷன் பட்டன்களுடன் வருகிறது. சிலிகான் (Silicone), லெதர் (Leather) மற்றும் மெட்டல் (Metal) ஆகிய ஸ்ட்ராப் (Straps) வேரியண்ட்கள் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஸ்மார்ட்போனுக்கு நிகரான பீச்சர்கள் வருகின்றன.

இனி மொபைல் அவ்ளோதான்! பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 4G சிம் கார்டு மாடல்!

அதே நேரத்தில் ஸ்மார்ட்வாட்ச்களில் மட்டும் கிடைக்கும் ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் டிராக்கர்களும் வருகின்றன. 2.13 இன்ச் (410 x 502 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டி (HD) ரெசொலூஷன் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுவொரு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) மாடலாகும்.

இந்த ஃபயர்-போல்ட் ஸ்னாப் மாடலில் ஸ்மார்ட்போனை போலவே சிப்செட், கிராபிக்ஸ் கார்டு, ரேம் மற்றும் மெமரி வருகிறது. ஆகவே, குவாட்-கோர் கோர்டெக்ஸ் சிபியு (Quad-core Cortex CPU) சிப்செட் மற்றும் மாலி ஜிபியு (Mali GPU) கிராபிக்ஸ் உள்ளது. அதேபோல 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் உள்ளன.

ஆண்டாரய்டு ஓஎஸ் (Android OS) உள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கிடைக்கிறது. இதன் மூலம் பேஸ்புக், யூடியூப், கூகுள் மேப், நெட்பிளிக்ஸ் போன்ற பெரும்பாலான ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் வருகிறது. எச்டி செல்பீ கேமரா (HD Selfie Camera) கொண்டிருக்கிறது.

இனி மொபைல் அவ்ளோதான்! பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 4G சிம் கார்டு மாடல்!

இந்த ஃபயர்-போல்ட் ஸ்னாப் மாடலில் கிளவுட் பேஸ்ட் வாட்ச் பேஸ்கள் (Cloud-based Watch Faces) மற்றும் ரன்னிங், வாக்கிங், ஜாக்கிங் உள்ளிட்ட மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Multiple Sports Modes) வருகின்றன. ப்ளூடூத் காலிங் சப்போர்ட் உள்ளது. ஆகவே, இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் (Inbuilt Mic and Speakers) உள்ளன. வீடியோக்களையும் பார்க்க முடியும்.

ஹெல்த் மானிட்டரிங் மற்றும் டிராக்கிங்களுக்கு ஃபயர்-போல்ட் ஹெல்த் சூட் (Fire-Boltt Health Suite) வருகிறது. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்லீப் டிராக்கிங் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். இந்த ஹெல்த் டேட்டாக்களுக்காக ஆப் சப்போர்ட் வருகிறது. இந்த மாடலானது, IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.

4ஜி நானோ சிம் கார்டு சிலாட் வருகிறது. ஆகவே, எல்டிஇ, ப்ளூடூத் மற்றும் வை-பை கனெக்டிவிட்டி சப்போர்ட் உள்ளது. இந்த ஃபயர்-போல்ட் ஸ்னாப் மாடலில் 1000mAh பேட்டரி வருகிறது. 30 நாட்களுக்கு ஸ்டான்ட்பை மோடிலும், 15 நாட்களுக்கு ப்ளூடூத் காலிங் மோடிலும் பேக்கப் கொடுக்கிறது. 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.6499ஆக இருக்கிறது.

அதேபோல 2 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.5,999ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆல்பைன் ஆலிவ், ஆர்சானிக் பிளாக், பிளாக் ஸ்டோர்ம், செர்ரி ப்ளஷ், கோகோ பிரவுன், ஜெட் பிளாக் லக்ஸ் மற்றும் மார்லெட் மெரூன் கலர்கள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire-Boltt Snapp With HD Camera Launched Sale From August 27 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X