Home
Gadgets

மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!

பிரபலமான ஃபயர்-போல்ட் நிறுவனம் சமீபத்தில் தான் ஃபயர்-போல்ட் டாக் அல்ட்ரா எனும் ஸ்மார்ட்வாட்ச்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மேலும் அசத்தலான மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து கெத்து காட்டியுள்ளது ஃபயர்-போல்ட் நிறுவனம். அதுவும் இந்த புதிய மூன்று ஸ்மார்ட்வாட்ச்கள் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளன.

தற்போது சாட்டன், டாக் 3 மற்றும் நிஞ்சா-ஃபிட் ஆகிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை தான் அறிமுகம் செய்துள்ளது ஃபயர்-போல்ட் நிறுவனம். இப்போது இந்த மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire

ஃபயர்-போல்ட் சாட்டன் ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளே அம்சங்கள்
ஃபயர்-போல்ட் சாட்டன் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.7-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 368x448 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ப்ளூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட் போன்ற அசத்தலான வசதிகளும் உள்ளன.

ஃபயர்-போல்ட் சாட்டன் நிறங்கள்
ஃபயர்-போல்ட் சாட்டன் ஆனது பிளாக், புளூ, பின்க், கிரே, சில்வர் மற்றும் கோல்டு பிளாக் நிறங்களில் கிடைக்கும். பின்பு ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச். மேலும் 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், இன்பிலிட் மைக் மற்றும் ஸ்பீக்கர் ஆதரவுகள், IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ஃபயர்-போல்ட் சாட்டன் ஸ்மார்ட்வாட்ச்.

அதேபோல் வானிலை அப்டேட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல், ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் போன்ற தரமான அம்சங்களுடன் இந்த ஃபயர்-போல்ட் சாட்டன் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire

ஃபயர்-போல்ட் டாக் 3 ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்
ஃபயர்-போல்ட் டாக் 3 ஸ்மார்ட்வாட்ச் 1.28-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ப்ளூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட் போன்ற சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. அதேபோல் இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஃபயர்-போல்ட் டாக் 3 ஸ்மார்ட்வாட்ச்.

ஃபயர்-போல்ட் டாக் 3 ஸ்மார்ட்வாட்ச் முக்கிய அம்சங்கள்
ஃபயர்-போல்ட் டாக் 3 ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. பின்பு IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் வானிலை அப்டேட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதிகளையும் கொண்டுள்ளது இந்த ஃபயர்-போல்ட் டாக் 3 ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக பிளாக், புளூ, பின்க், கிரீன் மற்றும் சில்வர் நிறங்களில் ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கும்.

ஃபயர்-போல்ட் நிஞ்சா ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்
ஃபயர்-போல்ட் நிஞ்சா ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.6-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் ஸ்லீப், SpO2, ஹார்ட் ரேட் டிராக்கிங் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஃபயர்-போல்ட் நிஞ்சா ஸ்மார்ட்வாட்ச் மாடல். குறிப்பாக பிளாக், புளூ, சில்வர், பின்க், ரெட் மற்றும் கிரீன் நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்க கிடைக்கும்.

மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire

மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் விலை
ஃபயர்-போல்ட் சாட்டன் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.3,999-விலையில் வாங்க கிடைக்கிறது. பின்பு டாக் 3 மற்றும் நிஞ்சா-ஃபிட் மாடல்களின் விலை முறையே ரூ.2,999 மற்றும் ரூ.1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்களையும் முன்னணி ஆஃப்லைன் தளங்களில் வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire Boltt Saturn, Talk 3, and Ninja-Fit smartwatches Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X