Home
Gadgets

வாங்குனா நீதான்.. AMOLED டிஸ்பிளே.. 4GB மெமரி.. VR வொர்க்அவுட்.. MOTION கேமிங்.. எந்த மாடல்?

நம்மில் பலருக்கு ஸ்மார்ட்வாட்ச் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருப்பினும், அதன் சிலிகான் ஸ்ட்ராப் டிசைனில் பலருக்கு நாட்டம் இருக்காது. இதனாலேயே ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்டெயின்லெஸ் டிசைனில் புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்துவருகின்றன. அந்தவரிசையில், ஃபயர்-போல்ட் பட்டையை கிளப்புகிறது.

சொல்லப்போனால், இப்போது ஃபயர் போல்ட் (Fire Boltt) நிறுவனத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. அந்த நிறுவனத்தின் ஃபயர் போல்ட் ராயல் என்னும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மிரட்டலான டிசைன் மட்டுமல்லாமல், மோஷன் கேம்ஸ், வாய்ஸ் அசிஸ்டன்ட்,ஹெல்த் சூட் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது.இந்த வாட்ச்சின் முழு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

AMOLED டிஸ்பிளே.. 4GB மெமரி.. VR வொர்க்அவுட்.. MOTION கேமிங் வாட்ச்!

ஃபயர் போல்ட் ராயல் அம்சங்கள் (Fire Boltt Royale Specifications): இந்த ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஆல்வேஸ் - ஆன் - டிஸ்பிளே (Always On Display) என்பதால், 750 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைனில் (Stainless Steel Design) மெட்டல் ஸ்ட்ராப் (Metal Strap) கொண்டிருக்கிறது. அதோடு ரவுண்ட் டயல் (Round Dial), ரோடேட்டிங் கிரவுன் (Rotating Crown) மற்றும் 2 கன்ட்ரோல் பட்டன்கள் (Control Buttons) வருகின்றன. மெட்டாலிக் டிசைனிலேயே ரோஸ் கோல்டு (Rose Gold), கோல்டு (Gold), பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் சில்வர் (Silver) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

இந்த ஃபயர் போல்ட் ராயல் மாடலில் 130+ இன்-பில்ட் வாட்ச் பேஸ்கள் (in-built watch faces) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. TWS கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் (Inbuilt Mic and Speaker), கால் ஹிஸ்டரி (Call history), குயிக் டயல் பேட் (Quick dial pad), சிங்க் கான்டாக்ட்ஸ் (Sync contacts) ஆகிய பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

AMOLED டிஸ்பிளே.. 4GB மெமரி.. VR வொர்க்அவுட்.. MOTION கேமிங் வாட்ச்!

இந்த வாட்ச் இயர்போன் சப்போர்ட் கொண்டிருப்பதால், எம்பி3 ஃபைல்களுக்கான 4 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங், சைக்கிளிங் போன்ற 300+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. அதேபோல விஆர் வொர்க்அவுட் (VR Workout) சப்போர்ட் உள்ளது. இந்த மாடலில் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த வாட்ச்சில் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் (Fire Bolt Health Suite) வருகிறது.

ஆகவே, ஸ்லீபிங் மானிட்டர் (Sleep Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஹார்ட் ரேட் டிராக்கிங் (Heart Rate Tracking), வுமன் ஹெல்த் டிராக்கிங் (Women Health Tracking) மற்றும் பிரீத் டிரெய்னிங் (Breathe Training) ஆகியவை வருகின்றன. இந்த ஃபயர் போல்ட் ராயல் வாட்ச் 380mAh பேட்டரி கொண்டுள்ளது. ஆகவே, பக்காவான பேக்கப் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

AMOLED டிஸ்பிளே.. 4GB மெமரி.. VR வொர்க்அவுட்.. MOTION கேமிங் வாட்ச்!

மேலும், மோஷன் கேமிங் (Motion Gaming), ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், வெதர் அப்டேட், கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல், டைமர், அலாரம் மற்றும் ஸ்டாப்வாட்ச் ஆகிய ஸ்மார்ட் பீச்சர்கள் வருகின்றன. இந்த வாட்ச் வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதன் விலை ரூ. 4,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுக சலுகை மட்டுமேயாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire Boltt Royale With AMOLED Display Sale From November 25 in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X