Home
Gadgets

சும்மா பட்டைய கிளப்புது.. வெறும் ரூ.1,499 போதும்.. மெட்டாலிக் பாடி.. ஸ்டெயின்லெஸ் டிசைன்.. ப்ளூடூத் காலிங்!

வெறும் ரூ.1,499 விலையில் எச்டி டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், மெட்டாலிக் பாடி மற்றும் ஸ்ட்ராப் மட்டுமல்லாமல், ஹெல்த் மானிட்டர், இன்-பில்ட் கேமிங் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் ஃபயர் போல்ட் ரைஸ் லக்ஸ் (Fire Boltt Rise Luxe) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபயர் போல்ட் ரைஸ் லக்ஸ் அம்சங்கள் (Fire Boltt Rise Luxe Specifications): இந்த ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச்சில் 1.85 இன்ச் (240 x 280 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. ரெக்டாங்கில் டிசைனில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி (Stainless Steel Body) கொண்டிருக்கிறது. அதோடு பிரீமியம் மெட்டாலிக் ஸ்ட்ராப் (Metalic Strape) கொண்டுள்ளது. ரோட்டேடிங் கிரவுண் (Rotating Crown) மற்றும் ஃபங்ஸ்னல் பட்டன் வருகிறது.

ரூ.1,499 போதும்.. மெட்டாலிக் பாடி.. ஸ்டெயின்லெஸ் டிசைன் வாட்ச்!

இந்த லக்ஸ் மாடலில் 100+ கிளவுட் பேஸ்ட் வாட்ச் பேஸ்கள் (Cloud-based Watch Faces) வருகின்றன. இதில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் (Inbuilt Mic and Speaker) வருகின்றன. அதுமட்டுமல்லாமல், சின்ங் கான்டாக்ட்ஸ் (Sync Contacts), கால் ஹிஸ்டரி (Call History) மற்றும் குயிக் டயல் பேட் (Quick Dial Pad) கொண்டுள்ளது.

இந்த ஃபயர் போல்ட் ரைஸ் லக்ஸ் வாட்ச்சில் வாக்கிங், ரன்னிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் உள்பட 123 ஸ்போர்ஸ் மோட்கள் (Sports modes) வருகின்றன. இந்த ஆக்டிவிட்டிகளை ரியல் டைமில் தெரிந்து கொள்ள முடியும். இந்த மாடலில் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant Support) கொடுக்கப்பட்டுள்ளது. இன்-பில்ட் கேம்ஸ் (In-built Games) வருகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் (Fire Boltt Health Suite) வருகிறது. ஆகவே, எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), ஹார்ட் ரேட் டிராக்கிங் (Heart Rate Tracking) மற்றும் வுமன் ஹெல்த் டிராக்கிங் (Women Health Tracking) சப்போர்ட் வருகிறது. அதுமட்டுமல்லாமல், டிரிங் வாட்டர் ரீமைண்டர் (Drink Water Reminder) மற்றும் செடண்டரி ரீமைண்டர் (Sedentary Reminder) கொண்டிருக்கிறது.

ரூ.1,499 போதும்.. மெட்டாலிக் பாடி.. ஸ்டெயின்லெஸ் டிசைன் வாட்ச்!

வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் ஆப் நோட்டிபிகேஷன்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notifications) சப்போர்ட் வருகிறது. மேலும், வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), கால்குலேட்டர் (Calculator), அலாரம் (Alarm), டைமர் (Timer) மற்றும் ஸ்டாப்வாட்ச் (Stopwatch) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், மியூசிக் கன்ட்ரோல் (Music Control) மற்றும் கேமரா கன்ட்ரோல் (Camera Control) சப்போர்ட் வருகிறது. பட்ஜெட் விலையிலும் IP67 தர வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water Resistance) கொண்டிருக்கிறது. இந்த ஃபயர் போல்ட் ரைஸ் லக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் தொடர்ந்து 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கக்கூடியது. அதோடு ஸ்டான்பை மோடில் 10 நாட்களுக்கும் மேல் பேக்கப் கிடைக்கும்.

இந்த மாடலில் பிளாக் (Black), கேல்டு (Gold), சில்வர் (Silver) மற்றும் ரோஸ் கோல்டு (Rose Gold) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், இந்த ஃபயர் போல்ட் ரைஸ் லக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்சின் விலை வெறும் ரூ.1,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது வெறும் அறிமுக சலுகை மட்டுமே என்பதால், விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, கம்மி பட்ஜெட்டில் பிரீமியம் மெட்டாலிக் டிசைன், ஹெல்த் மானிட்டர்கள், ப்ளூடூத் காலிங் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வேண்டும் என்றால், இந்த ஃபயர் போல்ட் ரைஸ் லக்ஸ் மாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire-Boltt Rise Luxe Smartwatch Under Rs 1500 Sale in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X