அமேசான் அதிருது.. ரூ.1099 பட்ஜெட்.. டாப் 3 மாடல்கள்.. விட்ட கிடைக்காத டிஸ்கவுண்ட்.. எந்தெந்த மாடல்கள்?
அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் விற்பனையில் (Amazon Mega Electronics Days Sale) வெறும் ரூ.1000 பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் போட், நாய்ஸ் மற்றும் ஃபயல்-போல்ட் ஸ்மார்ட்வாட்ச்கள் பக்கா டிஸ்கவுண்ட்டில் கிடைக்கின்றன. டாப் 3 மாடல்களின் விலை, அம்சங்கள் இதோ.
ஃபயர்-போல்ட் நிஞ்சா கால் ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Fire-Boltt Ninja Call Pro Plus Specification): இந்த மாடலில் 1.83 இன்ச் (240 x 280 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. 100+ வாட்ச் பேஸ்கள் கொண்டிருக்கிறது. ஹார்ட் ரேட் சென்சார், எஸ்பிஓ2 சென்சார் மற்றும் ஸ்லீப் மானிட்டர் வருகிறது.

அதேபோல ஆக்டிவிட்டி டிராக்கர், கலோரி டிராக்கர் கொண்டுள்ளது. இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்களுடன் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் வருகிறது. IP67 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன் உள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் கேமரா கன்ட்ரோல், மியூசிக் கன்ட்ரோல் பீச்சர் வருகிறது. 6 நாட்கள் பேட்டரி பேக்கப் கொடுக்கும்.
பிளாக், கோல்டு பிளாக், பிங்க், கிரே மற்றும் நேவி ப்ளூ ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டபோது, ரூ.1999ஆக விலை நிர்ணயம் இருந்தது. இப்போது, அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் விற்பனையில் வெறும் ரூ.1,099 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

நாய்ஸ் விவிட் கால் 2 அம்சங்கள் (Noise Vivid Call 2 Specifications): இந்த மாடலில் 1.85 இன்ச் (240 x 280 பிக்சல்கள்) எச்டி டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வருகிறது. ப்ளூடூத் காலிங் மற்றும் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 100+ வாட்ச் பேஸ்கள் வருகின்றன.
ஹார்ட் ரேட் மானிட்டரிங், எஸ்பிஓ2 மானிட்டரிங், ஸ்லீப் டிராக்கிங் மற்றும் ஃபீமேல் சைக்கிள் டிராக்கிங் கொண்டிருக்கிறது. அதேபோல ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங் போன்ற மல்டிபிள் வொர்க் அவுட் மோட்கள் வருகின்றன. நோட்டிபிகேஷன் டிஸ்பிளே, கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல் கொண்டுள்ளது.
IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் 7 நாட்கள் பேட்டரி வருகிறது. ஜேட் பிளாக், ஃபாரஸ்ட் க்ரீன், ஸ்பேஸ் ப்ளூ, சன்செட் ஆரஞ்ச், மெட்டல் பிளாக் (மெட்டல் ஸ்ட்ராப்) கலர்களில் கிடைக்கிறது. இந்த மாடல் அறிமுகமானபோது, இதன் விலை ரூ.1,199ஆக இருந்தது. இப்போது அமேசானில் ரூ.1,099 விலைக்கு கிடைக்கிறது.

போட் வேவ் கால் 2 அம்சங்கள் (boAt Wave Call 2 Specifications): இந்த வாட்ச்சில் 1.83 இன்ச் (240 x 284 பிக்சல்கள்) 2.5D கர்வ்ட் எச்டி டிஸ்பிளே வருகிறது. 1000+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் கொண்டிருக்கிறது. கிரெஸ்ட் ஆப் சப்போர்ட் வருகிறது. அதேபோல கிரெஸ்பிளஸ் ஓஎஸ் கொண்டுள்ளது.
ப்ளூடூத் காலிங் சப்போர்ட், குயிக் டயல் பேட், 700+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் வருகின்றன. இந்த மாடலிலும் IP67 ரெசிஸ்டன்ட் வருகிறது. அதேபோல ஹார்ட்ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கர் கொண்டுள்ளது. மியூசிக் கன்ட்ரோல், கேமரா கன்ட்ரோல் மற்றும் டிஎன்டி வருகிறது.
5 நாட்கள் பேட்டரி பேக்கப் கிடைக்கும். ஆர்க்கிட் ஹேஸ், ஆக்டிவ் பிளாக், கூல் கிரே, செர்ரி ப்ளாசம் மற்றும் சில்வர் மெட்டல் (மெட்டல் ஸ்ட்ராப்) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ரூ.1299 பட்ஜெட்டில் அறிமுகமானது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் ரூ.1,099 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








